Also Watch
Read this
By: Manigandan Raja

துப்பாக்கி இருப்பதாக கூறி அச்சுறுத்தியதால் பயணிகள் பீதி
ஆஸ்திரேலியாவிலிருந்து தோஹா சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த 2 ஆண்கள் தங்களிடம் துப்பாக்கி இருப்பதாகக் கூறி, சக பயணிகளை அச்சுறுத்தியதுடன், விமான பணியாளர்களையும் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து 2 பேருக்கும் கை விலங்கிட்ட விமானப் பணியாளர்கள், தோஹா விமான நிலையம் வந்தடைந்ததும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
மோசமான வானிலையால் குலுங்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானம்
இஸ்தான்புல்லில் இருந்து துனிசியாவுக்குச் சென்ற Turkish ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடுமையாக குலுங்கியதால் பயணிகள் பீதியடைந்து கூச்சலிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

துனிசியாவின் Carthage விமான நிலையத்தில் தரையிறங்கும் முயற்சி 3 முறை தோல்வி அடைந்ததால் Enfidha-Hammamet விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved