news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

உயர்மட்டப் பாதை பயன்பாட்டுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் கொடூர விபத்து

கோவா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோவா

இருசக்கர வாகனங்கள் செல்ல தற்காலிகத் தடை

கோவாவில் புதிதாக திறக்கப்பட்ட போர்வோரிம் உயர்மட்டப் பாதையில்(Porvorim Elevated Corridor) இருசக்கர வாகனங்கள் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி, அருகில் வந்த லாரி மீது தள்ளியதில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவசர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தின் கீழே உள்ள சர்வீஸ் சாலைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி

மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்தனர். மதுஅருந்திய சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு கடும் வயிற்று வலி, கண்பார்வை மங்கல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளச்சாரயத்தை சப்ளை செய்தது யார், எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் சாய்ந்த 624 ஆண்டுகள் பழமையான ஆலமரம்

சீனாவில் பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்த 624 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை, மீட்பு குழுவினர் விடிய விடிய போராடி மீண்டும் அதே இடத்தில் நட்டு உயிர்ப்பித்துள்ளனர். மரத்தின் வேர்கள் காய்ந்துவிடாமல் இருக்க வனத்துறை வல்லுநர்கள் தொடர்ச்சியாக பராமரித்து வந்த நிலையில், நவீன இயந்திரங்கள் உதவியுடன் இந்த அரிய சாதனை சாத்தியமாக்கப்பட்டுள்ளது.


Related Link
பிரிக்ஸ் சிறப்பு விருந்தில் அசைவம் தவிர்ப்பு

பிரிக்ஸ் சிறப்பு விருந்தில் அசைவம் தவிர்ப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எம்.எல்.ஏ. பேரன் என்று பந்தா, காதலி குடும்பத்தை மிரட்டும் 'போலி ரவுடி'

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved