Also Watch
Read this
இன்று நடைபெறுவதாக இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு எனக் கூறப்படும் நிலையில், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

திமுக முப்பெரும் விழா
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் கூறி இருப்பதாவது;
திமுக தலைவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று 15ஆம் தேதி மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்தி வைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு துரைமுருகன் கூறி உள்ளார்.

திமுக முப்பெரும் விழா விருது
2026ஆம் ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ - விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பா
‘அண்ணா விருது’ - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்
‘கலைஞர் விருது’ - துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா ‘பாவேந்தர் விருது’ - மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு
‘பேராசிரியர் விருது’ - தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பி
‘மு.க.ஸ்டாலின் விருது’ - இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
முரசொலி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘‘2026ஆம் ஆண்டுக்கான ‘முரசொலி செல்வம் விருது' ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ப.திருமாவேலனுக்கு வழங்கப்படுகிறது.

விழா ஒத்திவைப்பு
திமுக முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று மாலை நடைபெறவிருந்த விழா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved