Also Watch
Read this
By: Manigandan Raja

உடல் முழுவதும் 90% இடங்களில் பச்சைகுத்தி சாதனை
கனடாவை சேர்ந்த நபர் நூதனமான கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். எஃபெமரல் ரெமி என்று அழைக்கப்படும் ஜெரெமி ஸ்கோஃபீல்ட், தனது உடல் முழுவதும் 90 சதவீதம் அளவுக்கு பச்சைகுத்தி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இவரது முகம் உள்ளிட்ட சில முக்கிய இடங்கள் தவிர மீதமுள்ள அனைத்து இடங்களிலும் பச்சைகுத்தியுள்ளார். மேலும், இவரது உடலில் ஒரே இடத்தில் பலமுறை வரைந்து, கிட்டத்தட்ட 40 அடுக்குகள் வரை பச்சைகுத்தியுள்ளனர். சில பகுதிகளில் 100 முறைக்கும் மேலாக பச்சைகுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அருங்காட்சியகத்தில் ஜின்னா புகைப்படங்கள்
பங்களாதேஷ் அருங்காட்சியகத்தில் முகமது அலி ஜின்னாவின் புகைப்படங்கள் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டாக்கா பல்கலைக்கழக மாணவர் பேரவையின் புதுப்பிக்கப்பட்ட வரலாற்று ஆவணக் காப்பகத்தில், பங்களாதேஷ் விடுதலைக்கு பாடுபட்ட தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் தனிப்பட்ட புகைப்படங்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஜின்னாவின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனால், பங்களாதேஷ் மொழிப்போர் மற்றும் விடுதலை போருக்கு எதிராக நின்றவரின் புகைப்படத்தை வைப்பதா என மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.
ஷேக் ஹசீனா கட்சி மூத்த தலைவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டங்களை ஒடுக்கியதாக, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் 7 மூத்த தலைவர்களுக்கு வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பாதுகாப்புப் படையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved