news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

முதல்வர் விஜயை பார்ப்பதற்காக திரண்ட ரசிகர்கள்

காத்திருக்க வேண்டாம் என வேண்டுகோள்

30

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜயை பார்ப்பதற்காக, தேம்ஸ் நதிக்கரையில் அவர் தங்கியுள்ள Shangri-La The Shard ஓட்டல் முன்பு திரண்ட லண்டன் வாழ் தமிழ் ரசிகர்கள், இறுதி நிமிடத்தில் நிகழ்ச்சி ரத்தானதால் ஏமாற்றத்தில் வாக்குவாதம் செய்தனர்.

லண்டனில் முதல்வர் விஜய்
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்தப் பயணத்தின் போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, லண்டனில் மிக உயரமான கட்டடமான தி ஷார்ட் முன்பு, பொதுவெளியில் முதல்வர் விஜய், ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சந்திப்பு நிகழ்ச்சி ரத்து
முதலமைச்சர் விஜய், 15ஆம் தேதி பிற்பகல் லண்டன் வாழ் தமிழர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அவரைக் காண அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, முதல்வர் விஜய் பங்கேற்க இருந்த இந்த நிகழ்ச்சியை போலீசார் ரத்து செய்தனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்
இது, அவரை காண்பதற்காக திரண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பாதுகாப்பு தொடர்பான காரணங்களால், போலீசாரின் அனுமதி இல்லாததால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் குழுவினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பை வெளியிட்டனர்.

Related Link
இடைத்தேர்தல், வாக்காளர்களை அவமதிக்கும் செயல் என நீதிமன்றம் கண்டனம்

இடைத்தேர்தல், வாக்காளர்களை அவமதிக்கும் செயல் என நீதிமன்றம் கண்டனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 வயது கடந்து வாழ்ந்து வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து அசத்தல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved