news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

மசோதா

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நியூசிலாந்து

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

இந்தியா - நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 95 சதவீதப் பொருட்களுக்கான வரிகள் முற்றிலும் நீக்கப்படும் அல்லது கணிசமாக குறைக்கப்படும். இந்தியாவில் இருந்து நியூசிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 100 சதவீத இறக்குமதி வரியில் விலக்கு அளிக்கப்படும்.

அஞ்சல் வழி வாக்குப்பதிவில் எந்த வித மாற்றமும் இல்லை

நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் அஞ்சல் வழி வாக்குப்பதிவை கட்டுப்படுத்தும் தனது முயற்சிக்கு உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.

டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த அஞ்சல் வழி வாக்குப்பதிவு கட்டுப்பாடுகளை செயல்படுத்த போதிய அவகாசம் இல்லாததால் இந்தாண்டுத் தேர்தலில் அது செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த டிரம்ப், நீதிபதிகள் வெறும் நிழல் மனிதர்களாக மாறிவிட்டதாக சாடினார்.

கெஷ்ம் தீவில் அடுத்தடுத்து கேட்ட சக்திவாய்ந்த வெடிச் சத்தங்கள்

ஈரானின் கெஷ்ம் ((Qeshm)) தீவில் அடுத்தடுத்து பல சக்திவாய்ந்த வெடிச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. சத்தங்கள் அனைத்தும் கடலின் திசையிலிருந்து வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான கெஷ்ம் தீவில் பதிவான இந்த வெடிச்சத்தங்கள் குறித்து அதிகாரிகள் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

Related Link
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பற்றிய புதிய புத்தகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved