Also Watch
Read this
By: Manigandan Raja

புதிய தடைகள் மசோதாவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப்
ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான புதிய தடைகள் விதிக்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் நாடுகளின் பொருட்கள் இறக்குமதிகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவும் சீனாவும் பாதிக்கப்படக்கூடும் என கூறப்படும் நிலையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அதிபர் டிரம்ப்பின் முடிவில் உள்ளது.
அமெரிக்கா - டென்மார்க் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா - டென்மார்க் இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவ மற்றும் பாதுகாப்புப் பங்கு விரிவுபடுத்தப்படும்.

அதே நேரத்தில், கிரீன்லாந்து மீதான டென்மார்க்கின் இறையாண்மையும், கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ராணுவத் தளங்களை அமைக்கவோ, முதலீடுகள் செய்யவோ முற்றிலும் தடை விதிக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved