news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

ரூ.3,000 கோடி மெகா மோசடி, பணத்தை இழந்த மக்கள் கொதிப்பு

சிட்டாக பறந்த பாஸ்டர்

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலத்தில், அன்னை தெரசா அறக்கட்டளை பண மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டதை கண்டு, ஜெப கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து பாதிரியார் தப்பியோடியுள்ளார். இதனால் ஆவேசமான மக்கள், நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்து உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மூவாயிரம் கோடி ரூபாய் மெகா மோசடி வழக்கில் சிறைக்கு சென்ற பாதிரியார் உள்ளிட்டோரை சுதந்தர பறவைகளாய் வெளியே விட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

அன்னை தெரசா அறக்கட்டளை
சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையில் கடந்த 2023ஆம் ஆண்டில் அன்னை தெரசா அறக்கட்டளையை, விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்டர் செந்தில் குமார், ஜான்சி ஆகிய நால்வர் கொண்ட குழு தொடங்கியது. இதன் மூலம் இலவச கணினி பயிற்சி, தையல் பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி, போட்டித் தேர்வுகளுக்கான வகுப்பு நடத்துவதாக கூறி ஆசைவலையை விரித்தவர்களை நம்பி, ஏராளமான மக்கள் அறக்கட்டளையில் கூட்டு சேர ஆரம்பித்திருக்கின்றனர்.

கவர்ச்சியான வார்த்தைகள்...
ஆட்கள் சிறுக சிறுக சேர்ந்ததையடுத்து, மளிகை பொருட்கள் திட்டம், பென்சன் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களையும் அந்த கும்பல் அறிவித்தது. இதில் முதலீடு செய்த பணத்தை டபுளாக்கி தருவதாக கூறி கவர்ச்சியான வார்த்தைகளை அள்ளித் தெளித்துள்ளது மோசடி கும்பல்.

சிறைக்கு சென்றவர்கள்...
அதோடு, வெளிநாட்டிலிருந்து தங்கள் அறக்கட்டளைக்கு வரும் பணத்தை பிரித்து மக்களுக்கு வழங்க இருக்கிறோம் என மக்களுக்கு ஆசை காட்டினர். இதனை நம்பி ஏறத்தாழ 45 ஆயிரம் குடும்பத்தினர் அதில் இணைந்து தங்களது பணத்தை போட்டுள்ளனர்.

அப்பாவி மக்களிடமிருந்து கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்த கும்பல், ஆங்காங்கே சொத்துக்களை வாங்கி போட்டுக்கொண்டு செல்வத்தில் கொழித்துள்ளனர். இருப்பினும் ஊருக்கு நல்லது செய்கிறோம் என்ற போர்வையில் சுற்றித்திரிந்த அக்கும்பல் மீது சந்தேகமடைந்த சிலர் போலீசுக்கு தகவல் சொல்லியதால் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். அதன்பிறகாக, சிறையில் களி தின்றுக் கொண்டிருந்த அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

தப்பி ஓடிய பாஸ்டர்
இதனிடையே மோசடி செய்த அதே இடத்துக்கு சென்ற பாஸ்டர் செந்தில்குமார் துணிச்சலாக ஜெபக் கூடத்தை நடத்தி இருக்கிறார். பணத்தை இழந்த மக்களுக்கு இந்த தகவல் தெரிய வரவே, ஜெபம் நடந்த இடத்துக்கே சென்று கொந்தளித்து உள்ளனர். மக்கள் திரண்டதை அறிந்ததுமே பாஸ்டர் செந்தில்குமார், ‘துண்டை காணோம் துணியக் காணோம்,’ என பின்புறமாக தப்பினார். அதனால் மக்கள் சேர்களையும் டேபிள்களையும் உடைத்தெறிந்து ஆவேசமாயினர்.

பணம் கிடைக்குமா?
அதோடு அந்த கூடத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். தங்கள் குடும்பத்தினர் மட்டும் 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறிய பெண் ஒருவர், தங்கள் பணம் திருப்பி கிடைக்க வழி என்ன? என ஏக்கத்துடன் கேள்வி எழுப்பினர்.

Related Link
வங்கி லாக்கருக்குள்ளேயே கைவரிசை, ரூ.3.15 கோடி போலி நகை

வங்கி லாக்கருக்குள்ளேயே கைவரிசை, ரூ.3.15 கோடி போலி நகை

   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved