news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

’சொந்த அக்காவே,’ கண்ணீர் மல்க நடிகை ராதா குற்றச்சாட்டு

ரூ.46 கோடி மோசடி புகார்

40

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனது 5 காசோலைகளை எடுத்துச் சென்று, அதில் 46 கோடி ரூபாய்க்கு தொகையை நிரப்பி, அம்பிகாவின் பெயரில் வங்கியில் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா, கண்ணீருடன் புகார் அளித்து உள்ளார்.

கமிஷனர் அலுவலகத்தில் ராதா
இதுகுறித்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், கண்ணீருடன் நடிகை ராதா கூறி இருப்பதாவது;

எனது பெயரில் இருந்த 5 காசோலைகளை எடுத்துச் சென்று, அதில் மொத்தம் 46 கோடி ரூபாய்க்குத் தொகையை நிரப்பி, அம்பிகா அக்காவின் பெயரில் வங்கியில் செலுத்தி உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளேன்.

யாரை நம்புவது?
வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தான் நான் தங்கி இருந்தேன். அக்காவை நம்பாமல் வேறு யாரை நம்புவது? நான் அங்கு வைத்து விட்டுச் சென்ற பொருட்களில் இருந்து இந்தக் காசோலைகள் எடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த வீட்டிற்குள் என்னை அனுமதிக்கவில்லை. எங்களுக்குள் சொத்துப் பாகப்பிரிவினை ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஏ.ஆர்.எஸ். கார்டனில் அக்காவுக்கு ஒரு பெரிய கட்டிடம் தரப்பட்டது. எனக்கு இந்தப் பகுதி 2006ஆம் ஆண்டு தரப்பட்டது. அதனை மேம்படுத்தி வருகிறேன்.

எஸ்எம்எஸ் அலெர்ட், அதிர்ச்சி
என்னுடைய ஆர்.ஆர்.கார்டன்ஸ் வங்கிக் கணக்குடன் தொடர்புடைய காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட போது எனக்கு எஸ்எம்எஸ் அலெர்ட் வந்தது. செப்டம்பர் 16ஆம் தேதி அந்த அலர்ட் வந்தது. அதில் இருந்த தொகையைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த அளவுக்கெல்லாம் நான் சம்பாதிக்கும் ஆள் கூட கிடையாது. உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு அந்தக் காசோலைகளுக்கு ’ஸ்டாப் பேமண்ட்’ கொடுத்துவிட்டேன். அதனால் பணம் எடுக்கப்படவில்லை. ஆனால், அதற்குப் பிறகும் செப்டம்பர் 18ஆம் தேதி, 2ஆவது முறையாக மீண்டும் காசோலையை வங்கியில் செலுத்த முயற்சி செய்து உள்ளனர். 46 கோடி ரூபாய் எடுக்கப்படவில்லை. நான் உடனடியாக ’ஸ்டாப் பேமண்ட்’ கொடுத்ததால், பணப் பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது.

காசோலைகளை யார் எடுத்தார்கள்?
இதற்குப் பின்னால் என்ன நோக்கம் இருக்கிறது என்பது தெரிய வேண்டும். அம்பிகா அக்காவின் பெயரில், காசோலைகள் செலுத்தப்பட்டு உள்ளதால், அவரது பெயரை புகாரில் குறிப்பிட்டு உள்ளேன். எனக்கு சந்தேகம் உள்ள மற்றொருவர் எனது தம்பி மல்லிகார்ஜுன். காசோலைகளை யார் எடுத்தார்கள்? அதில் தொகையை யார் நிரப்பினார்கள்? வங்கியில் யார் செலுத்தினார்கள்? என்பதை எல்லாம் போலீசார் விசாரித்து கண்டுபிடிப்பார்கள்.
இவ்வாறு நடிகை ராதா கூறி உள்ளார்.

Related Link
அஜித்திற்கு பொதுச்செயலாளர் பதவி, விஜய்க்கு போட்டியாக புதிய TMK?

அஜித்திற்கு பொதுச்செயலாளர் பதவி, விஜய்க்கு போட்டியாக புதிய TMK?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.3,000 கோடி மெகா மோசடி, பணத்தை இழந்த மக்கள் கொதிப்பு

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved