news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

அக்.2 ஆம் தேதி வெற்றிப் பயணம் திட்டம்

செப்.27 அன்று சோதனை ஓட்டம்

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ள மகளிருக்குக்கான வெற்றிப் பயணம் திட்டத்தின் சோதனை ஓட்டம் வரும் 27ஆம் தேதி மேற்கொள்ள, முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு தரப்பில் கூறி இருப்பதாவது;
முதலமைச்சர் விஜய், ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110ன் கீழ், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை தவெக அரசு முதன்மையாகக் கொண்டு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, “வெற்றிப் பயணம்” என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

கட்டணம் இன்றி மகளிர் பயணம்
தற்போது, 7 அரசு போக்குவரத்து கழகங்களின் நகர சாதாரணப் பேருந்து மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் இந்த சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

27ஆம் தேதி சோதனை ஓட்டம்
இதன்மூலம், 7 அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள், மொத்த 1,94,649 நடைகளில் Singles, 1,65,312 நடைகள் இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள். மேலும், “வெற்றிப் பயணம்” பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடனான இணைப்புப் பணி நிறைவடைந்து உள்ளது. சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் 25ஆம் தேதிக்குள்ளும், சோதனை ஓட்டம் 27ஆம் தேதி அன்றும் மேற்கொள்ளப்படும்.

காந்தி ஜெயந்தியன்று...
“வெற்றிப் பயணம்” திட்டத்தினை முதல்வர், அக்டோபர் 2ஆம் தேதி அன்று தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மேலும், மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Link
புதிய தலைமைச் செயலகம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

புதிய தலைமைச் செயலகம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved