news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புதிய தலைமைச் செயலகம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி
tv

Also Watch

புதிய தலைமைச் செயலகம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

’யாருடைய ஆசைக்காக கட்டப்படுகிறது?’

23

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

யாருடைய ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு திட்டமிடுகிறது என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்திடுவோமோ? என்ற அச்சத்தில் இருக்கும் மீனவர்களுடன் திமுக துணைநிற்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு
மீனவ பிரதிநிதிகள் சந்தித்த புகைப்படத்துடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது;
சென்னை பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்? அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற? முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம், கடலைப் பார்ப்பதற்கல்ல.

திமுக துணை நிற்கும்
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்.

ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம். மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.க. துணைநிற்கும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Related Link
நடிகை அம்பிகா மீது நடிகை ராதா அதிர்ச்சி புகார்

நடிகை அம்பிகா மீது நடிகை ராதா அதிர்ச்சி புகார்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்திற்கு பொதுச்செயலாளர் பதவி, விஜய்க்கு போட்டியாக புதிய TMK?

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved