news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

வெடித்த பணமோதல், வில்லியான விசுவாசி, வீடியோவை லீக் செய்வேன் என மிரட்டல்

வீரமணியுடன் சேர்ந்து சிக்கிய ஃபிளாஷ்பேக்

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிறுமிகளை தன் இச்சைக்கு இரையாக்கிய பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி, கால் நூற்றாண்டுகால தனது விசுவாச தம்பதியாலேயே போலீசில் சிக்கி உள்ளார். பணத்தகராறில் வீடியோவை போலீசில் ஒப்படைத்த அவரது பணிப்பெண் தனது அடையாளத்தை காட்டவில்லை என்ற ஆத்ம திருப்தியில் இருந்த நிலையில் வீரமணியோடு சேர்ந்து, போக்சோ வழக்கில் அவரும் அவரது கணவரும் சிக்கும் நிலை ஏற்பட்டது.

கூடவே இருந்தவர்கள்...
ஆள்பலம், அரசியல்பலம், பணபலம் என எதிலும் குறைவில்லாத ஜெம் வீரமணியின் குட்டு தன் விரலாலேயே தனது கண்ணை குத்திக் கொண்டது போன்றுதான் தற்போது வெளியில் வந்துள்ளது. காவல்துறை உயரதிகாரிகள், அரசியல்புள்ளிகள் என அத்தனைபேரும் வாங்கிய பெருந்தொகைக்குமேல் வீரமணிக்கு விசுவாசத்தை காட்ட, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடனேயே இருந்த மகேந்திர சிம்ஹன்-சாந்தி தம்பதிதான் கம்பி நீட்டி உள்ளனர்.

பணம், யாரை விட்டது?
தொழில் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே வீரமணியுடன் இருப்பவர்கள் தான் மகேந்திர சிம்ஹன்-சாந்தி தம்பதி. வயிற்றில் கல்லைக்கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்க வேண்டும் என வீரமணி சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கும் அளவுக்கு விசுவாசியாகதான் கூடவே இருந்தனர். ஆனால், பணம் யாரை விட்டது?

சிறுமிகளை அழைத்து வருவது...
தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் இருவரையும் தங்க வைத்த வீரமணி அந்த தம்பதி அணியும் ஆடையிலிருந்து சாப்பிடும் உணவு வரை அவரது செலவுதான். ராஜாவீட்டு கன்றுக்குட்டிப்போன்று வாழ்ந்த தம்பதிக்கு முக்கிய வேலையே சிறுமிகளை அழைத்து வருவது, அவர்களுக்கு சிறு தொகையை கொடுத்து பாலியல் சம்பவத்தை மூடி மறைப்பது, வீரமணிக்கு தேவையான பணிவிடைகளை செய்வதுதான்.

பணம் கொடுக்கல் வாங்கலில்...
அதிலும், சாந்தியின் அஜெண்டாவே குடிசைகளில் வாழும் சிறுமிகளை நைசாக பேசி அழைத்து வருவதுதான். இதையே ஒரு தொழிலாக செய்து கொண்டிருந்த சாந்தி, சிறுமிகளுக்கு பணத்தை கொடுப்பதில் கஞ்சம் காட்டியதாகவும், வீரமணியிடம் தொகையை அதிகம் கேட்டதாக கூறப்படுகிறது. அதோடு, அடிக்கடி பணம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தாகவும் தெரிகிறது.

வீடியோ எடுத்து வைத்து...
உண்பது முதல் உறங்குவது வரை தனது தயவில்தான். தன்னிடமே டிமாண்ட் செய்கிறாரா.? என வீரமணி கடுமைகாட்ட ஒட்டமொத்த ரகசியங்களும் தங்கள் கையில்தான் என சாந்தியும் தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்பதற்காக வீரமணி ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது வீடியோ எடுத்துள்ளார் சாந்தி. அந்த வீடியோவால் சிக்கப்போவது ஜெம் வீரமணி மட்டுமல்ல. தானும், தன் கணவரும் தான் என்பதை சாந்தி அப்போது அறியவில்லை.

விபச்சார தடுப்பு பிரிவுக்கு...
பணத் தகராறால் ஆத்திரமடைந்த வீரமணி, சாந்தியையும், அவரது கணவரையும் தேனாம்பேட்டை பங்களாவைவிட்டே வெளியே அனுப்பினார். இதனால், ட்ரிகர் ஆன சாந்தி தான் ஏற்கெனவே pen drive-ல் பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையில் கொடுத்தார். ஆனால், தான் யாரென்ற அடையாளத்தை காட்டவில்லை.

மீண்டும் பங்களாவுக்கு...
இதனிடையே, தன்னை பற்றிய ரகசியங்கள் லீக் ஆகிவிடக்கூடாது என்பதற்காக வீரமணி மீண்டும் பங்களாவிற்கு தம்பதியை அழைக்க, அய்யோ அவசரப்பட்டுவிட்டோமோ? என்றெண்ணியபடியே அங்கு சென்றார் சாந்தி. ஆனாலும், அடையாளத்தை மறைத்துதானே pen drive கொடுத்துள்ளதாக ஆத்ம திருப்தியில் இருந்தார்.

கூண்டோடு 3 பேருமே...
வீரமணியின் வாடகை வீட்டை கண்டறிந்து அங்கிருந்த தம்பதியிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டபோதுதான் அத்தனை உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. தான் சிக்காமல் வீரமணி மட்டும் சிக்க வேண்டும் என்பதற்காக சாந்தி மெனெக்கெட்டதும் வீணானதால் தற்போது கூண்டோடு 3 பேருமே சிக்கிவிட்டனர்.

Related Link
தமிழ்நாட்டின் எப்ஸ்டீன், ஜெம் வீரமணி சிக்கியது எப்படி?

தமிழ்நாட்டின் எப்ஸ்டீன், ஜெம் வீரமணி சிக்கியது எப்படி?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-4

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved