Also Watch
Read this
By: Manigandan Raja

போட்டிகளின்போது கடுமையான பதற்றம் இருக்கும்
டெஸ்ட் கிரிக்கெட்தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வடிவம் என்பதால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் கடுமையான பதற்றம் இருந்ததாகும், அதன் காரணமாக இரவில் சரியாக தூங்கியது கிடையாது எனவும் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா கூறினார்.
இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் சர்மா 4,301 ரன்களை அடித்துள்ளார். இதில் 12 சதங்கள், 18 அரைசதங்களும் அடங்கும்.
ஜாகீர் கானுக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் வாழ்த்து
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாகீர் கானுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிஎஸ்கே ஒரு மிகப்பெரிய பிராண்ட் என்றும் பயிற்சியாளராக ஜாகீர்கான் சிறப்பாக செயல்படுவார் எனவும் நம்புவதாக பீட்டர்சன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா-ஜப்பான் மோதும் நட்பு ரீதியிலான டி-20 கிரிக்கெட்
இந்தியா-ஜப்பான் அணிகள் மோதும் நட்பு ரீதியிலான டி-20 கிரிக்கெட் போட்டி ஜப்பானின் சனோ பன்னாட்டு கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு நாடுகளுக்கிடையேயான 75 ஆண்டுகால தூதரக உறவை கொண்டாடும் விதாமாக நடைபெறும் போட்டியை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved