news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஜெம் வீரமணி வழக்கில் சிக்கிய ஆதாரம்

பிப்ரவரி 2 ஒரே நாளில் 2 நிலங்கள் விற்பனை

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாலியல் வன்கொடுமை வழக்கில் POCSO கைதாகி சிறையில் உள்ள ஜெம் வீரமணி, நரிவேடத்தில் தன்னை இரையாக்கிக் கொண்டதாக, கைதாவதற்கு முன்பு சாந்தி பேசி உள்ள வீடியோ வெளியாகி ஒருபக்கம் பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், வீரமணி 2 நிலங்களை விற்றதற்கான ஆதாரமும் வெளியாகி, வழக்கை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஒரே நாளில் 2 நிலங்களை விற்றதற்கான கிரய பத்திரம் வெளியாகி உள்ள நிலையில், அந்த பணத்தைதான் வீரமணி செட்டில்மெண்ட்டிற்காக பயன்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்து...
ஆண்டுக்கணக்கில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி, அவரது வாடகை வீட்டில் குடியிருந்து தரங்கெட்ட பணிவிடைகளை கால்நூற்றாண்டு காலமாக பார்த்து வந்த மகேந்திர சிம்ஹன்-சாந்தி தம்பதி,

தான் கண்ணசைத்தால் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கும் வீரமணியின் உற்ற உதவியாளர் கணேசன் ஆகிய 4 பேர் ஏற்கெனவே கைதாகி காவல்துறையின் கழுகு பார்வையில் உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகியவண்ணமே உள்ளன.

விற்பனையான நிலங்கள்
தங்கள் குடும்பத்தின் வணிகத்திற்கு உதவுவதுபோல் வீரமணி தந்திரமாக தங்கள் வீட்டுக்குள் நுழைந்ததாகவும், காட்ஃபாதர் என்ற போர்வையில் ஒளிந்துகொண்ட அவரது நரிவேடத்தை கணிக்கும் அளவுக்கு முதிர்ச்சியில்லாத தன்னை 13 வயதிலேயே இச்சைக்கு இரையாக்கி கொண்டதாகவும் சாந்தி பேசி இருந்த வீடியோ வெளியானது. அவர் கைதாவதற்கு முன்பு பேசி உள்ள இந்த வீடியோ ஒருபக்கம் உற்றுநோக்க வைத்துள்ள நிலையில் மறுபக்கம் வீரமணி 2 நிலங்களை விற்றதற்கான விற்பனை பத்திரங்களும் வெளியாகி வழக்கை சூடுபறக்க வைத்துள்ளது.

ரூ.80 கோடிக்கு விற்பனை
சென்னை, வெட்டுவாங்கேணி, நீலாங்கரை ஆகிய 2 பகுதிகளில் இருந்த தனக்கு சொந்தமான நிலங்களை தான் வீரமணி விற்பனை செய்து உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தான் அந்த 2 நிலங்களின் பத்திரப்பதிவுமே நடந்துள்ளது. வெட்டுவாங்கேணியில் உள்ள 2.15 ஏக்கர் நிலம் 36 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், நீலாங்கரையில் உள்ள 1.44 ஏக்கர் நிலத்தை 43 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கு தன்னை சூறையாடுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்ததால்தான் சுமார் 4 ஏக்கர் நிலத்தை அவசர அவசரமாக ரூ.80 கோடிக்கு வீரமணி விற்பனை செய்துள்ளதாகவும், அதில்தான் காவல் அதிகாரிகள் முதல் அரசியல் புள்ளிகள்வரை அனைவருக்கும் செட்டில்மெண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதுஒருபுறமிருக்க, வீரமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் அல்லது பிற ஆதாரங்கள் கைப்பற்றப்படுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை கையில் எடுக்க உள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதனால், மேலும் பல முக்கிய புள்ளிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
13 வயதிலேயே அத்துமீறியதாக பகீர், வீடியோ வெளியிட்ட உதவியாளர் சாந்தி

13 வயதிலேயே அத்துமீறியதாக பகீர், வீடியோ வெளியிட்ட உதவியாளர் சாந்தி

           


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்ஸ்டாவில் ராதாவுக்கு ஸ்டோரி, பிரஸ்மீட்டில் 'தேம்பி' அழுத அம்பிகா

24
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved