news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 13 வயதிலேயே அத்துமீறியதாக பகீர், வீடியோ வெளியிட்ட உதவியாளர் சாந்தி
tv

Also Watch

13 வயதிலேயே அத்துமீறியதாக பகீர், வீடியோ வெளியிட்ட உதவியாளர் சாந்தி

கைதுக்கு முன் நடந்தது என்ன?

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வீரமணி மீதான பாலியல் வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது உதவியாளர் சாந்தி, 13 வயதிலேயே தன்னிடம் அத்துமீறியதாக கூறி அதிர வைத்து உள்ளார். கைது செய்யப்படுவதற்கு முன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது என்ன? அவரது பகீர் குற்றச்சாட்டின் பின்னணி என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

போக்சோ வழக்கில்...
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.வீரமணி மீதான பாலியல் புகார்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி என்ற கேள்வி எழும் அளவிற்கு வந்த வண்ணமே உள்ளது. அந்த வரிசையில் இந்த விவகாரத்தில் கைது செய்த அவரது உதவியாளரான சாந்தி வெளியிட்டுள்ள வீடியோ பல கோணங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

உயிருக்கு ஆபத்து...
வீரமணி மற்றும் அவருடைய மகன் சித்தார்த் வீரமணி ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக சாந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் உதவி செய்வது போல தங்களுடைய வீட்டிற்கு வந்த வீரமணி, 13 வயது முதலே பாலியல் ரீதியாக சீரழித்து வந்ததாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். அவருடைய கெட்ட எண்ணங்களை கணிக்கும் அளவுக்கு தனக்கு முதிர்ச்சி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பாதுகாவலர் போல் நடித்து...
அறியாமலேயே இந்த கொடிய பாலியல் அத்துமீறல்களுக்கு தான் இரையானதாகவும், ஒரு வழிகாட்டி, பாதுகாவலர் போல நடித்து தன்னை சீரழித்ததாக வேதனையை வெளிப்படுத்திய சாந்தி அவருடைய சொந்த சுயநலத்திற்காக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

பண மோசடி புகார்
வீரமணியை 100 சதவீதம் நம்பி அவர் சொன்ன அனைத்தையும் செய்ததாகவும், நிதி நெருக்கடியின் போது தனக்கு தெரிந்த வழி மூலம் நிதியை ஏற்பாடு செய்து தந்ததாக தெரிவித்துள்ள சாந்தி, நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் தந்தையின் சொத்திலிருந்து தனக்கு கிடைத்த முழு பணத்தையும் அவரிடமே கொடுத்ததாக பகீர் கிளப்பியுள்ளார்.


கைது செய்யப்படுவதற்கு முன்...
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சாந்தி கைது செய்தவதற்கு முன்பு எடுத்த வீடியோ வெளியாகி இந்த வழக்கில் திருப்பு முனையாக அமைந்து உள்ளதோடு, அவரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனே விசாரணை மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்தகட்ட விசாரணை
வீரமணி விவகாரத்தில் அவரை தொடர்ந்து அவரது உதவியாளர் உட்பட பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், விசாரணை வளையத்திற்குள் பல்வேறு முக்கிய புள்ளிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனால் அடுத்த கட்ட விசாரணைக்கு பின்னரே இதுதொடர்பான முழு விவரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Related Link
வீரமணி விவகாரத்தில் நடந்த ‘பேரம்’ என்ன?

வீரமணி விவகாரத்தில் நடந்த ‘பேரம்’ என்ன?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில், செட்டில்மெண்ட் மன்னன் கணேசன்

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved