news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

தனியார் ஆம்னி பேருந்தில் திடீர் தீவிபத்து

கிரேட்டர் நொய்டா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP Bus

ஒரு பெண் உட்பட 9 பயணிகள் உயிரிழப்பு

உத்திரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயங்கர தீ விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட 9 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பேருந்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்தில் இருந்து புகை வருவதாக எச்சரித்தும், ஓட்டுநரும் நடத்துநரும் அலட்சியமாக வாகனத்தை இயக்கியதாகப் பயணிகள் குற்றம் சாட்டினர்.

ரயில் மோதி பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே ரயிலில் அடிபட்டு பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மீன்பிடிக்க சென்றுவிட்டு கவனக்குறைவாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது விரைவு ரயில் மோதியதில் விசா ராவ், திலீப், சரத், சிவா ஆகியோர் உயிரிழந்தனர். சல்மான் ராஜு படுகாயங்களுடன் டெக்கலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உ.பிரதேசத்தில் ஹரியானா பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசத்தில் உத்தரகாண்ட் ஏம்எல்ஏவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது பெண், காவலர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். ஹரியானாவின் ஃபதேஹாபாத்தைச் சேர்ந்த அந்த பெண்ணை, வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வரவழைத்து.

அம்ரோஹாவில் (( Amroha)) உள்ள உத்தரகாண்ட் எம்.எல்.ஏ. உமேஷ் குமாரின் பண்ணை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யதுள்ளனர். இது தொடர்பாக 2 காவலர்கள் மற்றும் 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Link
இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லடாக் வன்முறை - ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved