Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்கா வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் அதிருப்தி
ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசினார். அப்போது, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கும் முடிவு கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிட ஓஐசிக்கு உரிமை இல்லை
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக்கு எந்த உரிமையும் இல்லை என வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் எனவும், இந்த உண்மையை எத்தனை பொய் பிரசாரம் செய்தாலும், ஒருபோதும் மாற்ற முடியாது எனவும் உறுதியாக தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து'
ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயணிகள் அச்சமடைந்தனர். தீ விபத்து காரணமாக புகை வெளியேறி நிலையில், பயணிகள் விரைந்து வெளியேறினர். தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved