Also Watch
Read this
உற்சாக வரவேற்பு
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழாக்கோலம் பூண்டது
மதுராந்தகம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நடைபெறும் திடலுக்கு வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விசிலடித்தும், கரகோஷம் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வருக்கு வேல்
மதுராந்தகம் தொகுதி ஆத்தூாில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர் விஜய் அவருக்கு பூங்கொத்து மற்றும் வேல் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் மரகதம் குமரவேல்

முதல்வரின் கோட்டை
1947-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்றால் 2026-ல் தான் தமிழ்நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது; முதல்வர் விஜய்யின் பாதம் பட்ட மதுராந்தகம் தொகுதி இனி அவருடைய கோட்டையாக மாறும் மதுராந்தகத்தில் நடைபெறும் முதல்வாின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சா் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.

ஓட ஓட விரட்டுவார்
சாதாரண குடும்ப பின்னணி கொண்ட என்னை அமைச்சரவையில் அமரவைத்தவர் முதல்வர் விஜய் திராவிட கட்சிகள் மக்களுக்கு எதையும் செய்யவில்லை; திராவிட கட்சிகளை டெபாசிட் இழக்கச்செய்து ஓட ஓட முதல்வா் விரட்டுவாா் இந்த தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த தேர்தலிலும் ஒரே தலைவர் தளபதி விஜய் மட்டுமே என்று அமைச்சர் ராஜ்குமாா் பேசினார்.

திமுக வரலாற்றில்..
10, 12 கூட்டத்தில் அண்ணன் விஜய் பேசியதற்கே திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மகன் தோற்றுவிட்டனா். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் திமுக அமைச்சர்கள் அத்தனை பேரை தோற்க செய்தது முதல்வர் விஜய் பேச்சு. மரகதம் குமரவேலுக்கு பெயர் வைத்தது எம்.ஜி.ஆர், இந்த நிலைக்கு கொண்டுவந்தது ஜெயலலிதா என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved