Also Watch
Read this
By: Manigandan Raja

குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும் மற்ற தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையான முடிவுகளை ஞானேஷ் குமார் எடுத்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அக்டோபர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தலைமை தேர்தல் ஆணையர்
2019 மக்களவைத் தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக சார்பில் தன்னை போட்டியிட ஞானேஷ் குமார் அறிவுறுத்தியதாக கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி.ஜி.தாம்சன் தெரிவித்துள்ளார்.

பாஜகவிடம் இருந்து அல்லாமல் பணியில் உள்ள IAS அதிகாரியிடம் இருந்து இந்த ஆஃபர் வந்தது ஆச்சரியமாக இருந்தது என்றும், விருப்பம் இல்லாததால் வேண்டாம் என மறுத்துவிட்டதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved