Also Watch
Read this
By: Manigandan Raja

தியாகராஜ சுவாமி கோவிலில் வீதி பாராயணம்
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி திருக்கோயில் சைவ சமயத்தில் தலைமை பீடமாக விளங்கி வருகிறது. இன்று புரட்டாசிமாத பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் கிழக்கு கோபுர வாசல் உள்ள ராஜகணபதியை வணங்கி சன்னதி தெரு வழியாக கீழவீதி தெற்கு வீதி கமலாலய குளம் தென்கரை வடகரை வடக்கு வீதி வழியாக சுற்றி வீதி பாராயணம் நடைபெற்றது.

இதில் பக்தகோடிகள் இறையன்பர்கள் சிவனடியார்கள் கலந்து கொண்டு ஆரூர் வலம் வந்தனர் மேலும் ஆயிரகணக்காண பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருவாரூர் நகர காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved