Also Watch
Read this
By: Manigandan Raja

எப்ஸ்டீன் கோப்புகள் வெளியான போது நியமிக்கப்பட்டவர் விலகல்
அமெரிக்க உளவு அமைப்பான FBI-யின் துணை இயக்குநர் Andrew Bailey, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் FBI மற்றும் நீதித்துறை இடையே மோதல் போக்கு நிலவிய போது, கடந்த 2025 ஆகஸ்டில் வழக்கத்திற்கு மாறாக FBI-யின் இரண்டாவது துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட பெய்லி.
ஓராண்டுக்கும் மேலாக பதவியில் நீடித்த நிலையில், தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாக கூறி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த மக்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
அமெரிக்காவின் போர்டோ ரிக்கோ ((Puerto Rico)) அருகே மோனா தீவில் இருந்து சற்று தூரத்தில் புலம்பெயர்ந்த மக்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 மணி நேரத்துக்கும் மேலாக கடலில் தத்தளித்த 40க்கும் மேற்பட்டோரை அமெரிக்க கடலோர காவல்படையினர் மீட்டனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved