news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

இனி எல்லா தேர்தல்களிலும் தி.மு.க.விற்கு தோல்வி என முதல்வர் விஜய் உறுதி

பொங்கல் முதல் இலவச சிலிண்டர் திட்டம்

72

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தது போல, இனி ஒவ்வொரு தேர்தலிலும், தோல்விக்கு திமுக நன்றி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

தாராபுரத்தில் முதல்வர் விஜய்
தாராபுரத்தில், தவெக வேட்பாளர் சத்பாமாவை ஆதரித்து, முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பேசியதாவது;
என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் தொகுதி மக்களே. கொங்கு நாட்டின் சிங்கங்களே, தங்கங்களே, என் சொந்தங்களே, எல்லோருக்கும் வணக்கம். பக்ரீத், கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் என அனைத்து விழாக்களுக்கும் தவெக வாழ்த்து சொல்லும். த.வெ.க. ஆட்சியில் அனைத்து மதத்தினரும் சமமே.

திமுகவுக்கு தோல்வி தான்
கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தது போல இனி ஒவ்வொரு தேர்தலில் தோல்விக்கு திமுக நன்றி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இடைத்தேர்தலுக்கு பிறகு, ’மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம்’ என திமுக அறிக்கை விடும். திமுகவினர் ஒருமையில் பேசு வருகின்றனர். எவ்வளவு தூரம் தரம் தாழ்த்துகிறார்களோ, மக்கள் அந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பார்கள்.

துரோகம் செய்வோருக்கு வாக்களிப்பீர்களா?
தீய சக்தி திமுகவிற்கு ஓட்டு போட மாட்டோம் என தாராபுரம் தொகுதி மக்கள் உறுதி அளிக்க வேண்டும். எம்.ஜிஆர், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த மற்றும் பலருக்கும் வாக்களிக்க கூடாது.

பொங்கல் முதல்...
வீட்டிற்கு 3 இலவச சிலிண்டர் திட்டம் பொங்கல் முதல் அமலுக்கு வரும். தமிழக மக்களின் நலன் காக்க த.வெ.க. அரசு தொடர்ந்து செயல்படும்.

தவெக அரசின் சாதனைகள்
நாம் ஆட்சி அமைத்த குறுகிய காலகட்டத்திலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டு 2000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காலை உணவு திட்டம் விரிவாக்கம், விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பால் கொள்முதல் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மன்னராட்சி மனப்பான்மை
2026 தேர்தலில் மக்கள் தவெகவிற்கு வாக்களித்ததை மறந்து இன்னமும் தாங்கள்தான் முதல்வர் என சிலர் நினைக்கிறார்கள். நம்மிடம் இந்த மன்னராட்சி மனப்பான்மை என்பது எப்பவும் கிடையாது. எம்மதமும் நம் மதம் என்று சொல்லிதான் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம்.
தீயசக்தி திமுக உடன் மறைமுகமாக கூட்டணி அமைத்து சுயநலமாக சுற்றுபவர்கள் நாங்கள் இல்லை.

செல்லிட்டே இருக்கவேண்டியது தான்
கொளத்தூர் மக்கள் ஓட்டுபோடாததற்கு நன்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது, ‘அந்த குழந்தையே நீங்கள்தான்,’ என சொல்வது போல இருக்கிறது. இனிவரும் தேர்தல்களிலும் ஓட்டு போடாத மக்களுக்கு திமுக தலைவர் நன்றி என சொல்லவேண்டி இருக்கும்.

குறுநில மன்னர்களை...
சாதாரண மக்களை தேர்தலில் நிற்க வைத்துதான் குறுநில மன்னர்களை தோற்கடித்துள்ளோம். அண்ணா காலம், எம்.ஜி.ஆர். காலம்போல் தற்போது நம் காலத்திலும் சாதாரண மக்கள்தான் தேர்தலில் நின்று வென்றுள்ளோம்.

அக்டோபர் 2 முதல்...
மகளிருக்கான வெற்றிப்பயணம் திட்டம் அக்.2 முதல் செயல்படுத்தப்படும். தவெக ஆட்சி பொறுப்பேற்றதும் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவர பூங்கா அமைக்கும் பணி நடைபெறுகிறது.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விதைகளை சேமிக்கும் கிடங்கு மடத்துக்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிள்ளைகளின் ஆட்சி
அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து நடந்தது அப்பா ஆட்சி,
இன்று நடப்பது பிள்ளைகளின் ஆட்சி. நம்ம வீட்டு பிள்ளைகளின் ஆட்சி.
கொங்கு பகுதி மக்கள் சத்தியத்தின் பக்கம் இருப்பீர்கள், அதே போல இந்த தேர்தலில் நமது சத்தியபாமா பக்கம் இருங்கள்.
தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவிற்கு விசில் சின்னத்தில் வாக்களிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Related Link

"திமுகவின் கிளை கழகம் அதிமுக" என முதல்வர் விஜய் கடும் விமர்சனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இனி எல்லா தேர்தல்களிலும் தி.மு.க.விற்கு தோல்வி என முதல்வர் விஜய் உறுதி

71
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved