news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ரூ.7000 கோடி கேட்கும் நடிகை, ஏஐ நிறுவனம் மீது வழக்கு

பேசுபொருளான சம்பவம்

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரூ.7000 கோடி கேட்கும் நடிகை, ஏஐ நிறுவனம் மீது வழக்கு

'தி லெஜண்ட்' பட நடிகை ஊர்வசி ரவுடேலா 7000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஏஐ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.
தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஏஐ நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி உள்ளார்.

பெயரையும் அடையாளத்தையும்...
லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ்-ஐ பின்னணியைக் கொண்ட Bollywood.AI மற்றும் Hollywood.AI ஆகிய நிறுவனங்கள், தனது பெயரையும் டிஜிட்டல் அடையாளத்தையும் பயன்படுத்தி, பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை உருவாக்கி உள்ளதாக ஊர்வசி ரவுடேலா தரப்பு குற்றம் சாட்டி உள்ளது.

ஊர்வசி பெயரை...
இந்த விதிமீறலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக சுமாராக 7,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கோருவது குறித்து அவரது சட்டக் குழு மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. "உங்கள் ஏஐ நிறுவனத்தையோ பிராண்டையோ வளர்த்து கொள்ளுங்கள், ஆனால் அனுமதி இல்லாமல் ஊர்வசி பெயரை பயன்படுத்தாதீர்," என அவரது சட்டக்குழு கடுமையாக எச்சரித்து உள்ளது.

வேடிக்கையானது
இதுகுறித்து, Bollywood.AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷீராஸ் ஹசன் கூறும்போது, "ஊர்வசியிடம் எடுக்கப்பட்ட ஒரு நேர்காணல் வைரலானதைத் தொடர்ந்து இந்த ₹7000 கோடி கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளது, இது வேடிக்கையானது," என்று தெரிவித்து உள்ளார். ’பாலிவுட்டில் டிஜிட்டல் நட்சத்திரங்களும் ஏஐ படங்களுமே எதிர்காலம் என்பதால், ஊர்வசி இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்,’ என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பேசுபொருளானது
இந்தியாவில் ஸ்ருதிஹாசன், சல்மான்கான், அனில்கபூர் போன்ற முன்னணி பிரபலங்கள் தங்களின் தனிமனித டிஜிட்டல் உரிமைகளைப் பாதுகாக்க, ஏஐ நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடி வரும் சூழலில், ஊர்வசி ரவுடேலாவின் இந்த 7000 கோடி ரூபாய் விவகாரம், உலக அளவில் பேசு பொருளாகி உள்ளது.

Related Link
சினிமாவில் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம் பற்றி டாப்ஸி வேதனை

சினிமாவில் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம் பற்றி டாப்ஸி வேதனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாராபுரத்தில் முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்

41
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved