news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

இடைத்தேர்தல் ரிசல்ட் குறித்து ஆளும்கட்சி எடுத்த சர்வே

முதல்வர் வருகைக்கு பிறகு...

40

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆளும்கட்சி தரப்புல மதுராந்தகத்துலயும், தாராபுரத்துலயும் ஒரு சர்வே எடுக்கப்பட்டிருக்காம். மதுராந்தகத்துல தெம்பான ரிசல்ட்டும், தாராபுரத்துல கொஞ்சம் சொதப்புற ரிசல்ட்டும் வந்ததுல ஆளும்கட்சி கேம்ப் ஆடிப்போயிருக்காம்.

தவெகவுல பல ஸ்ட்ரேடஜி டீம் இருந்தாலும், அதுல ஒரு டீம் இடைத் தேர்தல் நடக்குற மதுராந்தகத்துலயும், தாராபுரத்துலயும் மக்களோட பல்ஸை தெரிஞ்சுக்க, ஒரு மெகா சர்வே நடத்தியிருக்காம். அந்த சர்வே ரிசல்ட்ல மதுராந்தகத்துல விசில் ஜெயிக்கறதுல பெரிய சவால் இருக்காதுன்னும், ஆனா நினைச்ச மாதிரியான பெரிய வாக்கு வித்தியாசம் வராதுன்னு வந்திருக்காம்.

தாராபுரத்தைப் பொறுத்தவரைக்கும் தவெகவுக்கு இன்னும் கூட சாதகமான சூழல் இல்லைன்னும், அதிமுகவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கறதாவும் பல காரணங்களை சுட்டிக் காட்டி சர்வே முடிவுகள்ல டேட்டா கொடுக்கப்பட்டிருக்காம்.

இதுக்குப் பிறகுதான் அதிமுகவுல இருந்து வந்த பலருக்கும் தவெகவுல போஸ்டிங் போடப்பட்டதும், திருப்பூர் மாவட்டத்துல இருக்கற முக்கியமான அதிமுக நிர்வாகிகளை தவெக பக்கம் இழுக்கறதும் நடந்துக்கிட்டிருக்காம்.

ஆனா, முதல்வரோட தாராபுரம் பிரச்சாரத்துக்குப் பிறகு தவெக பக்கம் வெற்றிக் காற்று வீசும்ங்கற நம்பிக்கையில தொகுதியோட ஆளும்கட்சி பொறுப்பாளர்கள் தேர்தல் வேலை பார்த்துக்கிட்டிருக்காங்களாம்.

Related Link
ஆட்சிக்கும் கட்சிக்கும் முதல்வரின் சிறப்பு உளவுத்துறை

ஆட்சிக்கும் கட்சிக்கும் முதல்வரின் சிறப்பு உளவுத்துறை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பருவமழை தொடங்கப்போகுது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved