Also Watch
Read this
By: Manigandan Raja

பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன் மூலம் பயங்கர தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் முழுவதும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 188 ஆளில்லா விமானங்களையும் ரஷ்யா ஏவியதில் கீவ், சுமி, ஒடெசா, கார்ஜி மற்றும் சாபோரிஜியா போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், தொழில்துறை கட்டடங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. தாக்குதலில் பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா கொடூர வான்வழித் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
குளிர்காலத்தில் உக்ரைன் மக்களின் வெப்பமூட்டும் வசதிகள் மற்றும் குடிநீர் விநியோகத்தைத் துண்டிப்பதற்காக, அவர்களின் மின்சார உள்கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கற்றல் துறையில் தகவல் தொழில்நுட்ப சாதனம் பயன்பாடு
கல்வித்துறையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றலை மேம்படுத்தியமைக்காக பின்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு யுனெஸ்கோ விருது வழங்கியிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு சாதனங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இரு நாடுகளும் சிறப்பு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக யுனெஸ்கோ பாராட்டு தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved