news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஓமன் துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு இருக்கலாம்

டிரம்ப் தெரிவித்துள்ளார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

IRGC-யால் தூண்டப்பட்டிருக்கலாம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஃபிளைதுபாய் விமானத்தில், இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்திய ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

துணை விமானி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் தூண்டப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்க குழுவினர் ஆராய்ந்து வருவதாகவும் கூறினார். துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த தாக்குதலுக்கு ஆதரவளித்ததற்காக ஈரானை அமெரிக்கா தண்டிக்கும் என்றும் எச்சரித்தார்.

ஃபிளைதுபாய் விமான சம்பவம் குறித்த வீடியோ வெளியீடு

துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஃப்ளைதுபை விமானத்தில் இந்திய விமானி மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்துக்கு பிந்தைய விடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில், விமானி ஸ்மித் மச்சார் ரத்த வெள்ளத்தில் போராடி வருவதும், விமானத்துக்குள் உதவி பெற்று வருவதும், காயத்தால் கடுமையாக அவதியடைவதும் பதிவாகியுள்ளது.

மேலும், காயமடைந்த விமானி மச்சார், அவர் என்னை பலமுறை தாக்கினார் என்று கூறுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓமன் துணை விமானி தீவிர மத அடிப்படைவாதி

விபத்தை ஏற்படுத்த முயன்ற ஃபிளைதுபாய் விமானத்தின் துணை விமானி தீவிர மத போதனைக்கு உள்ளாக்கப்பட்டவர் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து உள்ளார். ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவருக்கு ஈரானுடன் தொடர்பு உள்ளதா என்பதை புலனாய்வாளர்கள் சில நாட்களில் கண்டறிவார்கள் எனவும் கூறினார்.

தாக்குதல் நடத்தியவரின் பின்னணி, அவருக்கு உடந்தையாக யாரேனும் இருந்தார்களா உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றார்.

Related Link
வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved