Also Watch
Read this
By: Manigandan Raja

ஆசிய விளையாட்டு- இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தங்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க தங்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவை 1-க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம், 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் மகளிர் ஹாக்கி தங்கத்தை இந்தியா வென்றுள்ளது.
இந்த வெற்றியால் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி நேரடித் தகுதி பெற்றுள்ளது.
இன்றைய ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா இன்று பல்வேறு முக்கிய போட்டிகளில் களமிறங்குகிறது. ஏற்கனவே 76 பதக்கங்களை வென்றுள்ள இந்தியாவுக்கு, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி இறுதிப்போட்டிகள் முக்கியமாக அமைந்துள்ளன.

ஆடவர் கிரிக்கெட் இறுதி போட்டியில் பாகிஸ்தானையும், ஹாக்கியில் மலேசியாவையும் இந்தியா எதிர்கொள்கிறது. கோல்ஃபில் பிரணவி உர்ஸும் பதக்கத்துக்காக இன்று களமிறங்குகிறார்.
65 கிலோ குத்துச்சண்டையில் தங்கம் வென்ற பர்வீன் ஹூடா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 65 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா, தமது பதக்கத்தை இந்தியாவுக்கும், மறைந்த தமது சகோதரர் ஹர்த்திக் ரதிக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனை சென் நியென்-சென்னை எதிர்கொண்ட அவர், 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved