Also Watch
Read this
By: Manigandan Raja

பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி கொக்கரிப்பு
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரும் சின்னமும் அழிந்துவிட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். நந்திகிராம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹசிராணி ரத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை சுட்டிக்காட்டி, பிரதான குற்றவாளியும் சிறைக்கு செல்வார் என்று கூறினார்.
விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலுக்கு காங்கிரஸ் பாராட்டு
இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தை இணை விமானி விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவத்தில், விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலை காங்கிரஸ் கட்சி வெகுவாக பாராட்டியுள்ளது.

ஸ்மித் மச்சாரின் விரைவான சிந்தனையும் உறுதியான நடவடிக்கையும் என்றும் முன்மாதிரியாக இருக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக வெடித்த போராட்டம்
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் இறங்கிய நிலையில் அவர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து ஜந்தர் மந்தர் பகுதி அடைக்கப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved