Also Watch
Read this
By: Manigandan Raja

ஸ்கிரீன்ஷாட் வெளியானதால் இணையவாசிகள் விமர்சனம்
காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கான கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கேமரா அணைத்து வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சர்வதேச எரிசக்தி முகமையின் ((IEA)) நிர்வாக இயக்குனர் ஃபாத்திஹ் பிரோல் ((Fatih Birol)) இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நிலையில், இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
டெக்சாஸில் 4 வயது மகளை சுட்டுக் கொன்ற தாய்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், தனது 4 வயது மகளின் பராமரிப்பு உரிமையை இழந்த பெண் ஒருவர், மகளை சுட்டுக் கொன்றதுடன், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த 35 வயதான சிபெல் சவெல்லா, தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்ற நிலையில், அவரது மகளை முன்னாள் கணவரிடம் ஒப்படைக்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்த சவெல்லா மகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved