news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கருட வாகனத்தில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி எழுந்தருளல்

திருவீதி உலா காட்சி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வெங்கட்ரமண சுவாமி

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத பெரும் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன்
நாள்தோறும் சுவாமி சிறப்பு வாகனத்தில் பக்தர்களுக்கு திருவீதி உலா காட்சி தருகிறார்.

இந்த நிலையில் இன்று கல்யாண வெங்கட்ரமண சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.


ஆலயம் வந்த கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் துளசியால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை காட்டினார். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு வெள்ளி கருட வாகன திருவீதி உலா நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Related Link
துர்க்கை அம்மன் கோவில் பொங்கல் திருவிழா

துர்க்கை அம்மன் கோவில் பொங்கல் திருவிழா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திரிணமூல் காங்கிரசின் பெயரும் சின்னமும் அழிந்துவிட்டது

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved