Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட லிங்கநாயக்கன்பட்டியில் கிராமத்தில் புத்தூர் நாடு நான்கு கரைக்கு பாத்தியப்பட்ட புகழ் பெற்ற துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நல்லுத்தேவன்பட்டியிலிருந்து சாமி பெட்டி மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொங்கல் பானையுடன் மேளதாளத்துடன் ஊர்வலமாக லிங்கநாயக்கன்பட்டி வழியாக எடுத்து வந்து கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.இதில் லிங்கநாயக்கன் பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள்
மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
மேலும் குடும்பத்தில் நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் வாழைப்பழங்கள் மற்றும் நாணயங்களை சூறையிட்டு நேற்றிக் கடனை செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved