news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா வரலாற்று சாதனை

ஒருநாள் போட்டி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரோகித் சர்மா

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க வீரராக 10,000 ரன்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர், சிறப்பாக விளையாடி 85 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க வீரராக 10 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது பேட்டர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். அவர் இதுவரை தொடக்க வீரராக 204 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 54 புள்ளி 83 சராசரியுடன் 10 ஆயிரத்து 90 ரன்கள் குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் ராகுல் புதிய சாதனை

இந்திய வீரர் கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் 87 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் 4 ஆயிரத்து 288 ரன்களும், 101 ஒருநாள் போட்டிகளில் 3 ஆயிரத்து 541 ரன்களும், 72 டி20 போட்டிகளில் 2 ஆயிரத்து 265 ரன்களும் எடுத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது.

ராகுல் 129 ரன்களும், ரோகித் சர்மா 92 ரன்களும் விளாசினர். ருதுராஜ் 57 ரன்கள் எடுத்தார். கடின இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி, 48.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் சதமும், அமிர் ஜங்கூ அரைசதமும் அடித்தனர்.

Related Link
இந்தியா - பிரேசில் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி

இந்தியா - பிரேசில் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மியூசிக் அகாடமியில் ஸ்வராஞ்சலி விழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved