news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

ரஜினிகாந்த் நடிக்கும் "ஜெயிலர் 2" திரைப்படம்

அக்டோபர் 15

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jailor 2

படத்தின் டிரெய்லர் வரும் 5-ம் தேதி வெளியீடு

"ஜெயிலர் 2" திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 5-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.

சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையில், அக்டோபர் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆர்வத்தால் இசையமைப்பாளரானேன் - ஹிப்ஹாப் ஆதி

இசையை முறையாக கற்றுக்கொள்ளாமல், ஆர்வத்தின் மூலம் இசையமைப்பாளரானதாக ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற ‘மீசையை முறுக்கு 2’ சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய அவர், படம் நெப்போட்டிசம் குறித்து பேசினாலும், அதைத் தாண்டி முக்கியமான கருத்தை சொல்வதாக தெரிவித்தார்.

AI உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கலைஞர்களின் பணியை எளிதாக்கும் கருவிகள் என்றும் அவர் கூறினார்.

ராகவா லாரன்ஸ், நிவின் பாலி நடிக்கும் "பென்ஸ்" திரைப்படம்

ராகவா லாரன்ஸ், நிவின் பாலி நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதி, அவரது ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தில் வில்லனாக நிவின் பாலி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகன், சம்யுக்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Link
பெங்களூரு விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் - சரத்குமார் சந்திப்பு

பெங்களூரு விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் - சரத்குமார் சந்திப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காஸ் நிரப்பிக்கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறிய கார்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved