Also Watch
Read this
By: Manigandan Raja

ரஜினியை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம் - சரத்குமார்
பெங்களூருவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து நடிகர் சரத்குமார் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். மைசூரில் நடைபெறும் தங்களது படப்பிடிப்பு பணிகள் மற்றும் பணிச்சூழல் குறித்து இருவரும் பரிமாறிக் கொண்டதாகவும், சென்னை வந்ததும் ரசிகர்கள் மற்றும் அபிமானிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டது மறக்க முடியாத அனுபவமாகவும், மகிழ்ச்சியான தருணமாகவும் அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
மொத ராத்திரி" திரைப்பட குழுவினருக்கு நடிகர் கார்த்தி பாராட்டு
நடிகர் கார்த்தி, ‘மொத ராத்திரி’ திரைப்பட இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான இந்த படம், புதிதாக திருமணமான ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
துரோகம் பழகு" திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு
‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை நடுக்கடலில் முற்றிலும் மாறுபட்ட முறையில் வெளியிட்டு கோலிவுட் வட்டாரத்தில் படக்குழுவினர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த வித்தியாசமான புரமோஷன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி. பியூலா மகிழ் தயாரிப்பில், நம்பிக்கை, துரோகம் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தை சீயோன் ராஜா இயக்கியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved