news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நெல்லையில் இயக்குநர் அட்லி பேட்டி
tv

Also Watch

நெல்லையில் இயக்குநர் அட்லி பேட்டி

பத்தா திரைப்பட குழு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Atlee

விஜய் இல்லாவிட்டாலும் சினிமா தனது பாதையில் பயணிக்கிறது

பத்தா திரைப்பட குழுவினர் நிலையில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய இயக்குனர் அட்லி ‘பத்தா’ திரைப்படம் மனதிற்கு நெருக்கமான திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த படம் ஒரு குடும்ப திரைப்படம். மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லக்கூடிய படமாக இது அமைந்துள்ளது. எந்தவிதமான ஆபாச காட்சிகளும் இல்லாமல், ஜாலியாக
அனைவரும் படம் பார்க்கும் அளவிற்கு அமைந்துள்ளது.

படத்தின் கருத்துதான் மக்கள் மத்தியில் சென்றடையும்.படம் நன்றாக இருந்தால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். மக்கள் அதிக அளவில் வந்து பார்ப்பார்கள். பெரிய படமோ, சின்ன படமோ, படம் நன்றாக இருந்தால் அது பொதுமக்களை மகிழ்ச்சியுடன் சென்று சேரும்.

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ படத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். ‘ஜவான்-2’ திரைப்படம் இப்போதைக்கு இல்லை. ஷாருக்கானுடன் அடுத்த படம் செய்தாலும், ‘ஜவான்’ படத்தின் அடுத்த பாகத்தை செய்ய மாட்டேன். வேறு படம் தான் இருக்கும்.

முதல்வராக நடிகராக இருந்த விஜய் சென்றிருந்த போதிலும் சினிமா அதன் பக்குவத்தை எடுத்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு விஷயத்தை சொல்லி வருகிறது. அண்ணன் விஜய் மக்களுக்கான நல்லதை செய்து வருகிறார்.

அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமா உலகில் விஜய் இல்லையென்றாலும் சினிமா அதன் பாதையை பின்பற்றி வருகிறது. விஜய் சினிமாவில் இல்லாமல் அரசியலுக்கு சென்றுள்ளார்.
அதன் காரணமாக திரையுலகிற்கு இழப்பு இல்லை.

மக்களுக்கு நல்லது நடந்தால் எதுவும் இழப்பு இல்லை.முதல்வர் விஜயின் மகன் சஞ்சய் நமது தம்பி. அவர் நடித்தால் அவரை வைத்து நல்ல படம் பண்ணுவோம். நியாயமான சினிமா, நியாயமான தமிழகம் என அனைத்தும் நியாயமாக இருக்க வேண்டும்.

மக்களோடு மக்களாக திரைப்படம் வெளியிடும்போது இயக்குநர்கள், நடிகர்கள் இணைந்து இருப்பது வழக்கமான ஒன்று. மக்களுடன் இணைந்து இருப்பதற்காகவே திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று நாங்கள் பார்வையிடுகிறோம்.

சென்னையில் இருந்து கொண்டு சென்னையில் உள்ள மக்களை மட்டுமே பார்த்துக் கொண்டு சென்றால் நன்றாக இருக்காது. அதன் காரணமாகவே பல்வேறு பகுதிகளுக்கும் சென்று
அனைவரையும் சந்தித்து வருகிறோம் என தெரிவித்தார்.

Related Link
ரணபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்

ரணபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெல்லையில் இயக்குநர் அட்லி பேட்டி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved