Also Watch
Read this
By: Manigandan Raja

இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதே நோக்கம்
70 ஆயிரம் இந்தியத் திறன்மிக்க தொழிலாளர்களை ரஷ்யா பணியில் அமர்த்தவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக் கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், இந்தியா - ரஷ்யா ஆகிய இரு தரப்பும் வர்த்தகம் மற்றும் முதலீட்டைச் சமச்சீரான முறையில் விரிவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாகக் கட்டுமானம் மற்றும் தளவாடங்கள் துறைகளில் 70 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஈரான் மீதான முடிவு விரைவில் வரக்கூடும் - டிரம்ப்
ஈரான் மீதான முடிவு விரைவில் வரக்கூடும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அது எளிதான வழியா அல்லது கடினமான வழியா என்பதை ஈரான் தான் தீர்மானிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் போரினால் கடுமையாகச் சிதைந்துள்ளதாகவும், அமெரிக்கா மிக விரைவில் ஒரு இறுதி முடிவை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், எட்டு மாதப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குமான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில்,மீண்டும் ஏற்படக்கூடிய மோதலுக்கு ஈரானும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
நவீன துறைகளில் மராத்தி மொழியின் பயன்பாடு அதிகரிப்பு
AI, விண்வெளி மற்றும் உயிரித் தொழில்நுட்பம் போன்ற நவீன துறைகளில் மராத்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.

டிஜிட்டல் தளங்கள் மற்றும் OTT சேவைகளில் மராத்தி உள்ளடக்கங்கள் பெருமளவு கிடைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், இதன் மூலம் நவீன அறிவியல் கருத்துக்களை சாமானிய மக்களும் தங்கள் தாய்மொழியிலேயே எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved