news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஏரியில் மிதந்த 4 சிறார்களின் உடல், உலகை விட்டு விடைபெற்ற உயிர்கள்

விடுமுறை கொண்டாட்டத்தில் பெருந்துயரம்

26

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பெரிய ஏரியில் இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் சடலமாக மிதந்த பெருந்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விடுமுறையை மகிழ்ச்சியோடு கழித்துக் கொண்டிருந்த 4 சிறுவர்களின் வாழ்க்கை முடிந்து போன சோகம் அவர்களது பெற்றோர் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

விளையாடச் சென்றவர்கள்...
சென்னையை அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரம், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்த சிறார்கள் நான்கு பேர் விளையாட சென்ற நிலையில், பொழுது சாய்ந்த பின்னரும் வீட்டுக்கு வரவே இல்லை. தனியார் பள்ளி மாணவர் யுவனேஷ், அரசு பள்ளி மாணவர்கள் தேவதர்ஷன், பூஜா, குஷி ஆகிய நான்கு பேரும் அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிந்து இணை பிரியாத நண்பர்களாய் வலம் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தொடர் விடுமுறை விடப்பட்டதால் நேரம் காலம் இல்லாமல் வீதிகளிலேயே விளையாடி பொழுதை தீர்த்த நான்கு பேரையும் சனிக்கிழமையன்று காணவில்லை.

தேடி அலைந்தும்...
நான்கு பேரின் பெற்றோரும் கூலி தொழிலாளர்கள் என்பதால் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலை நான்கு மணிக்கே பிள்ளைகள் மாயமானது குறித்து பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் பதறியடிக்கொண்டு அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து குழந்தைகளை கண்டால் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

சிசிடிவி காட்சியில்...
இந்நிலையில், நான்கு குழந்தைகளும் பெரிய ஏரியில் சடலமாக மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து சென்று பார்த்த போது, பெற்றெடுத்த பிள்ளைகள் உயிரற்ற பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுது பெற்றோர் துடியாய் துடித்தனர். குடியிருப்பிலிருந்து நடந்தே செல்லும் தூரத்திலேயே உள்ள இந்த ஏரிக்கு அவர்கள் குளிக்க சென்றதாக சொல்லப்படும் நிலையில், அண்மையில் ஏரி தூர் வாரப்பட்டதால் சேற்றில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே இரு சிறுவர்கள் நடந்து சென்ற கடைசி நிமிட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கண் கலங்க வைத்த...
’கடைக்கு செல்ல வேண்டும் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்,’ என அறிவுறுத்தி தனது மகன் தேவதர்ஷனை விளையாட அனுப்பி வைத்த நிலையில், ‘இனி அவன் வீட்டுக்கு வரவே மாட்டான்’ என கண்ணீர் மல்க அவரது தாய் கூறியது பார்ப்போரை கலங்க வைக்கிறது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், ஏரியில் இருந்து நான்கு மாணவர்களின் உடல்களையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு வழக்கு பதிவு செய்து குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
உயிரிழந்தவருக்கு 10 மணி நேரம் சிகிச்சை? மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

உயிரிழந்தவருக்கு 10 மணி நேரம் சிகிச்சை? மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகி மீதான பாலியல் புகார், புகாரளித்த பெண்ணின் ஆடியோ "லீக்"

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved