விமானத்தை மோத செய்ய விரும்பினேன், மரணத்திற்கு அஞ்சவில்லை
கேப்டன் ஸ்மித் மச்சரை தாக்கிய ஃபிளைதுபாய் துணை விமானி, விமானத்தை மோத செய்ய விரும்பியதாகவும், மரணத்திற்கு அஞ்சவில்லை எனவும் கூறியுள்ளான்.
தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்ட ஓமன் நாட்டை சேர்ந்த 29 வயதான ஹமாம் அல் ஹம்மாமி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறான். இவன் ஓமனை சேர்ந்த தந்தைக்கும், சிரியாவை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தவன் என்பது தெரியவந்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்த 3 நாட்டு மக்கள்
ஃபிளைதுபாய் விமான நாசவேலை முயற்சியின்போது இஸ்ரேலியர்கள், இந்தியர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தினர் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்ததாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஃபிளைதுபாய் விமானத்தை நொறுங்க செய்து, பயணிகள் அனைவரையும் கொல்ல வேண்டும் என ஜிகாதி பயங்கரவாதி நினைத்ததாகவும், ஆனால், இஸ்ரேலியர்கள், எமிரேட்ஸ்வாசிகள், இந்தியர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இதுதான் இந்த பிராந்தியம், உலகத்தின் எதிர்காலம் என கூறியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி உத்தரவு
இஸ்ரேலுக்கு வரும் அனைத்து சர்வதேச மற்றும் வெளிநாட்டு சிவில் விமானங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு அம்சங்களையும் முழுமையாக மறு ஆய்வு செய்யுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து இந்த அவசர உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். இனி இஸ்ரேலுக்குள் நுழையும் வெளிநாட்டு விமானங்களின் பைலட்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற விபரங்களை தீவிரமாக சோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.