news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் என உதயநிதி குற்றச்சாட்டு

பாமாயில் கொள்முதலில் முறைகேடு

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து பாமாயில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம் என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி குற்றம் சாட்டி உள்ளார்.

துவரம்பருப்பு கொள்முதல்
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
திமுக ஆட்சியில் கிலோ ரூ.109க்கு கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89க்கு வாங்கி உள்ளதாகவும், இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.

என்ன காரணம்?
இத்தகைய விலை குறைப்புக்குக் காரணம், இந்த சர்க்கஸ் சர்க்கார் அல்ல, திமுக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை. 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது திமுக அரசு. இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று திமுக மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.

பாமாயில் கொள்முதலில்...
இதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், திமுக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90க்கும், டிசம்பரில் ரூ.121.95க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த சர்க்கஸ் ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99க்கும், தற்போது ரூ.148க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து உள்ளனர்.

திமுக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.

உண்மையிடம் இருந்து...
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystemல் சிக்கி நிற்பது ஏன்? அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
ஞானேஷ்குமாரை பதவி நீக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு

ஞானேஷ்குமாரை பதவி நீக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெற்றிப்பயணம் திட்டத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்

30
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved