news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பழைய தங்கங்களைத் தக்கவைப்பதா? புதிய தங்கங்களை உருவாக்குவதா?

ஆசிய விளையாட்டில் இந்தியாவின் தங்க வேட்டை

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
  • 2023ஆம் ஆண்டில், சீனாவின் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற 28 தங்கங்களை மீண்டும் எட்டுமா? என்ற கேள்வியுடன் தொடங்கிய, ஐச்சி-நகாயோ ஆசிய விளையாட்டுப் பயணம், இறுதிக்கட்டத்தில் முற்றிலும் வேறு திருப்பத்தை எடுத்துள்ளது.


  • ஒரே நாளில் 6 தங்கம்...


  • அக்டோபர் 2ஆம் தேதி ஒரே நாளில் 6 தங்கங்களை வென்றதும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி தனிநபர் வில்வித்தை, கோல்ஃப், ஆடவர் கிரிக்கெட் ஆகியவற்றில் கிடைத்த வெற்றிகளும் இந்தியாவின் ஒட்டுமொத்தப் படத்தை மாற்றியுள்ளன.


  • புதிய விளையாட்டு, புதிய வீரர்கள், புதிய பிரிவுகளில் இந்தியா எத்தனை தங்கங்களை வென்றது? என்பதும் முக்கியமானதாக மாறியுள்ளது.


  • தனிநபர் பிரிவிலும் வரலாற்றுச் சாதனை


  • அக்டோபர் 2 இந்தியாவின் மிகச் சிறந்த நாட்களில் ஒன்றாக அமைந்தது. ஜப்பானின் ஐச்சி–நகாயோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றது.
    மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல் தங்கம் வென்றார். குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹெய்ன், பர்வீன் ஹூடா, அங்குஷ் பங்கல் ஆகியோர் தங்கம் வென்றனர்.
    வில்வித்தையின் Women’s Recurve Team பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத், கும்கும் அனில் மொஹோத், கீர்த்தி ஆகிய 3 வீராங்கனைகள், அணியாகப் போட்டியிட்டு தங்கம் வென்றது.
    இதன் மூலம் ஒரே நாளில் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் 6 தங்கங்கள் சேர்ந்தன.
    குறிப்பாக அங்கிதா பகத், கும்கும் அனில் மொஹோத், கீர்த்தி ஆகியோர் அடங்கிய இந்திய அணி Women’s Recurve Team பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தது.


  • 17 வயதான இந்திய வீரர்


  • வில்வித்தையின் Women’s Individual Recurve பிரிவில் தென் கொரியாவின் ஓ யேஜினை எதிர்கொண்ட 17 வயதான இந்தியாவின் கும்கும் மொஹோத் இறுதியில் 5-5 என்ற சமநிலைக்கு பிறகு நடைபெற்ற ஷூட்-ஆஃப்பில் 10 புள்ளிகளைப் பெற்று தங்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தப் பிரிவில் இந்தியாவுக்காக வரலாற்றுச் சாதனை படைத்தார்.
    இதற்கு முன்பே கும்கும், மகளிர் Recurve அணிப் பிரிவில் தங்கமும், கலப்பு Recurve பிரிவில் வெள்ளியும் வென்றிருந்தார்.


  • எனவே, ஒரே போட்டியில் பல்வேறு Recurve பிரிவுகளில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையாகவும் அவரது செயல்பாடு கவனம் பெற்றுள்ளது.
    தனிநபர் ஆடவர் ரிகர்வ் பிரிவில் நீரஜ் சவுகான் வெண்கலம் வென்றார்.
    இந்திய வீரர் தைரஜ் பொம்மதேவராவை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி நீரஜ் வெண்கலத்தை கைப்பற்றினார்.
    இதனால் தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கமும் வெண்கலமும் கிடைத்தன.
    இதனால் “தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் இல்லை” என்ற முந்தைய நிலவரம் முற்றிலும் மாறியது.

  • கோல்ஃபில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம்


  • மற்றொரு வரலாற்றுச் சாதனை கோல்ஃப் மைதானத்தில் நிகழ்ந்தது. பிரணவி உர்ஸ் மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் கோல்ஃப் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
    இது இந்திய கோல்ஃபுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த தனிநபர் தங்கமாகும்.


  • 2002ல் ஷிவ் கபூர் ஆடவர் தனிநபர் கோல்ஃபில் தங்கம் வென்ற பிறகு, 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் தனிநபர் கோல்ஃப் தங்கத்தை வென்றுள்ளது.
    பிரணவி உர்ஸின் வெற்றி இன்னொரு காரணத்தாலும் முக்கியமானது. அவர் தனிநபர் தங்கத்தை வென்றதுடன், அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர் ஆகியோருடன் இணைந்து மகளிர் அணிப் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுத் தந்துள்ளார்.
    அதாவது, சீனாவின் ஹாங்சோவில் இல்லாத ஒரு புதிய தங்கப் பிரிவை இந்தியா ஐச்சி-நகாயோவில் உருவாக்கியுள்ளது.



  • பாகிஸ்தானை வீழ்த்தி கிரிக்கெட்டில் மீண்டும் தங்கம்


  • இதற்கிடையே ஆடவர் கிரிக்கெட் அணியும் இந்தியாவின் தங்க எண்ணிக்கையை மேலும் உயர்த்தியது.
    இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது.
    அபிஷேக் சர்மா அதிரடியாக 61 ரன்களும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் எடுத்தனர். பதிலுக்கு பாகிஸ்தான் 192 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற நிலையில் ஆட்டத்தை முடித்தது.
    இதனால் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.


  • இதன் மூலம் இந்தியா ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் தங்கத்தை மீண்டும் தக்கவைத்துள்ளது.
    பெண்கள் கிரிக்கெட்டிலும் இந்தியா ஏற்கெனவே தங்கம் வென்றிருந்ததால், ஐச்சி-நகாயோவில் ஆடவர் மற்றும் மகளிர் இரு பிரிவுகளிலும் கிரிக்கெட் தங்கம் வென்றுள்ளது. கிரிக்கெட்டில் இது இந்தியாவுக்கு இரட்டை தங்கமாக அமைந்துள்ளது.


  • பழைய தங்கமா? புதிய தங்கங்களை உருவாக்குவதா?


  • 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்கள் வென்றது.
    ஹாங்சோவில் வென்ற ஆடவர் மற்றும் மகளிர் கபடி, காம்பவுண்ட் வில்வித்தையின் மூன்று அணிப் பிரிவுகள், மகளிர் கிரிக்கெட் ஆகிய 6 தங்கங்களை இந்தியா மீண்டும் தக்கவைத்துள்ளது.
    இப்போது ஆடவர் கிரிக்கெட்டிலும் தங்கம் வென்றுள்ளதால், ஹாங்சோவில் இருந்த அதே தங்கப் பிரிவுகளில் மீண்டும் வென்ற எண்ணிக்கை 7 ஆகிறது. இதற்கு மேலாக, ஜப்பானின் ஐச்சி-நகாயோவில் ஹாங்சோவில் இல்லாத அல்லது வேறு வடிவத்தில் கிடைத்த புதிய தங்கங்களும் சேர்ந்துள்ளன.


  • ஹாங்சோவில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த சில முக்கியமான தனிநபர் பிரிவுகளில் இந்த முறை அதே அளவிலான வெற்றி கிடைக்கவில்லை என்பது உண்மை.
    ஆனால், அதே நேரத்தில் புதிய கதவுகள் திறந்துள்ளன. மகளிர் தனிநபர் ரிகர்வில் கும்கும் மொஹோத். மகளிர் தனிநபர் கோல்ஃபில் பிரணவி உர்ஸ்.


  • மகளிர் ஹாக்கியில் இந்திய அணி. குத்துச்சண்டையில் புதிய தங்கங்கள்.
    மல்யுத்தத்தில் புதிய தங்கம். ஆடவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்திய தங்கம். இவை அனைத்தும் இந்தியாவின் தங்கப் பதக்கப் பட்டியலை வேறு திசையில் நகர்த்தியுள்ளன.
  • Related Link
    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு தங்க வேட்டை

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு தங்க வேட்டை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் உச்சவரம்பு அதிகரிப்பு

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved