Also Watch
Read this
முதல்வர் விஜய் மதுரைக்குப் போயிருந்தப்போ, அவரு கையில கொடுக்கப்பட்ட நித்தியானந்தாவோட கைலாசா புத்தகம் பெரிய சர்ச்சைய ஏற்படுத்தியிருக்காம், இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சில அட்வைஸ்களை வழங்கியிருக்காம்.

தமிழக முதல்வர் விஜய் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்துக்குப் போற வழியில பலர் பரிசோட காத்துக்கிட்டிருந்தாங்க, அதுல சிலவற்றை முதல்வர் தன்னோட பாதுகாப்பு அதிகாரிகள் மூலமா வேன்ல நின்னுக்கிட்டே வாங்கிக்கிட்டு போனாரு. அப்படித்தான் நித்தியானந்தாவோட சீடர்களும் வரிசையா நின்னு நித்தியானந்தாவோட கைலாசா பத்துன புத்தகத்தை காட்டிக்கிட்டிருந்திருக்காங்க.

அப்போ அவங்களைப் பார்த்து கையசைச்சாரு முதல்வர், அப்போ முதல்வரோட பாதுகாப்பு அதிகாரிகள் அவங்ககிட்ட இருந்து ஒரு கைலாசா புத்தகத்தை வாங்கி முதல்வர் கையில கொடுத்திருக்காங்க, அந்த புத்தகத்தை எல்லோருக்கும் காட்டியபடியே முதல்வர் அவங்களை கடந்து போனாரு.

இன்டர்போல் போலீஸால தேடப்படுற ஒரு குற்றவாளியா இருக்கறவரோட புத்தகத்தை எப்படி முதல்வருக்கு வாங்கிக் கொடுக்கலாம்ங்கற சர்ச்சை ஏற்பட்டிருக்கு. கூடவே முதல்வருக்கு கொடுக்கப்படுற புத்தகங்களை தீவிரமா செக் பண்ணனும்னு முதல்வரோட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு டிஜிபி அலுவலகம் அட்வைஸ் கொடுத்திருக்காம்.

இதே நித்தியானந்தா சீடர்கள் சில நாட்களுக்கு முன்னால புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்திச்சு, புதுச்சேரிக்கு நித்தியானந்தா வர்றாரு பாதுகாப்பு கொடுக்கணும்னு கேட்டு அதே கைலாசா புத்தகத்தைக் கொடுத்திருக்காங்க, ’அவரு வந்தா பார்த்துக்கலாம், போயிட்டு வாங்க,’ன்னு ரங்கசாமி அனுப்பி வெச்சாராம்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved