news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டி20 போட்டி

லக்னோ

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs wI T20

லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது

  • இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது.
  • ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி மீண்டும் தங்கம் வென்றுள்ளதால், அதே உத்வேகத்துடன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்களை தக்கவைக்கும் நாள்

  • ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்களை தக்கவைக்கும் கடைசி நாள் வரும் நவம்பர் 15ம் தேதி என தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் அனைத்து 10 அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பரில் மினி ஏலம் நடைபெற உள்ளது.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டி

  • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்காரஸ், சகநாட்டு வீரரான ஜாமு முனாரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முதல் செட்டை 5-க்கு 7 என்ற கணக்கில் இழந்த அல்காரஸ், அடுத்த 2 செட்களிலும் அபாரமாக விளையாடி 6-க்கு 3, 6-க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
  • இதன் மூலம் ஜப்பான் ஓபன் தொடரில் தொடர்ந்து 9-வது வெற்றியை பதிவு செய்தார். இறுதிப்போட்டியில் செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை அல்காரஸ் எதிர்கொள்கிறார்.


Related Link
வெற்றி மேடையில் இந்திய வீரர்கள், தமிழ்நாட்டுக்கு தனி இடம்

வெற்றி மேடையில் இந்திய வீரர்கள், தமிழ்நாட்டுக்கு தனி இடம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருதநாயகம் படத்தை இயக்க ஆசை - அட்லீ

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved