தற்போது தேசத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் இனி அமைதியை உணரவே முடியாது என்று தோன்றுவதாக நடிகர் சஞ்சய் தத் கூறிய கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது கருத்து அன்பு, அரவணைப்பு, ஒற்றுமையை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'காந்திகிரி' போன்றது எனவும், தனது வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடித்துள்ள "ரணபாலி"
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அஜய் - அதுல் இசையமைக்கின்றனர்.
படம் 5 மொழிகளில் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ளது.
ஏகன் நடிக்கும் "ஹைக்கூ" திரைப்படம்
ஏகன் நடிக்கும் “ஹைக்கூ” திரைப்படத்தின் டிரெய்லர் இன்று((அக்டோபர் 6)) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ஹரி கூடுதல் திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார்.
சித்து குமார் இசையில், தயாரிப்பாளர்கள் டாக்டர் அருளானந்து - மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் 23-ம் தேதி வெளியாகவுள்ளது.