news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும்

54

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், மழைப் பொழிவு இருக்கும் இடங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பாதை
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;
தெற்கு கேரள கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல, வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, மன்னார் வளைகுடா முதல் மத்திய மகாராஷ்டிரா வரை, தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

அக்டோபர் 06
கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 23 மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 07
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு, சேலம் ஆகிய 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 08
கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 09
நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 23 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 10
கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி உள்பட16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை அக்டோபர் 7ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Link
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சுவிட்சர்லாந்தில் இந்தியர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகும் - பிரதமர் மோடி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved