மத்தியப் பிரதேசம் குனோ தேசியப் பூங்காவில், இந்தியாவிலேயே பிறந்த KJP21 என்ற பெண் சிறுத்தை 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதையடுத்து இந்தியாவின் மொத்த சிறுத்தை எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது;
இதில் 41 சிறுத்தைகள் இந்தியாவில் பிறந்தவை. இந்தக் குட்டிகளின் தந்தை போட்ஸ்வானாவில் இருந்து வந்த சிறுத்தை என்பதால், இந்தியாவில் போட்ஸ்வானா மரபணு வரிசையின் தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியில் மீண்டும் திருப்பம்
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். செப்டம்பர் மாதம் கட்சியில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆகாஷ், தற்போது மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளார்.
கட்சி மற்றும் பகுஜன் இயக்கத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
இந்தியா சீனா உறவில் நம்பிக்கை குறைபாடு
இந்தியா சீனா உறவில் நம்பிக்கை குறைபாடு மற்றும் வர்த்தக உரசல் தொடர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 எல்லைப் பிரச்சனைக்குப் பிறகு உறவை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நிலவும் பதற்றம், மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் சீன முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகள் முக்கிய சவால்களாக உள்ளன.