news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஞானேஷ்குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு, இந்தியா கூட்டணி போராட்டத்தால் பதற்றம்

வீதியில் இறங்கிய ராகுல், பிரியங்கா

47

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைநகரமே பதற்றத்துக்கு உள்ளானது.

S.I.R. விவகாரம்
நாடு முழுவதிலும் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் சுமார் 13 கோடி மக்களின் வாக்கு உரிமையை பறித்து பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில் தான், எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் 14 முறை ஆட்சேபனை தெரிவித்தும் தங்களுக்கு தெரியாமல் பல உத்தரவுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி போர்க்கொடி உயர்த்தவே, எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியதை போல் எதிர்கட்சிகளி ன் போராட்டம் பற்றி எரிகிறது.

தலைநகர் டெல்லியில்...
கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை, வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கியதற்கு காரணமாக இருந்ததாக கூறி, ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இந்தியா கூட்டணி கட்சியினர் தலைநகர் டெல்லியில் தேசியக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

தேர்தல் ஆணையம் நோக்கி...
இதனிடையே, நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையிலான பேரணி நடைபெற்ற நிலையில், அவர்கள் நிதி ஆயோக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, பேரிகார்டுகள் மீது ஏறிய ராகுல் காந்தி, தனது கையில் மூவர்ணக் கொடியை ஏந்தி பறக்கவிட்டார்.

தர்ணா போராட்டம்
இதனை தொடர்ந்து akashwani bhawan வளாகத்தின் கேட் இடுக்கு வழியாக நுழைய முற்பட்ட ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனிடையே வளாகத்துக்குள் நுழைந்த ஒருவர் வாகனத்தின் மீது ஏறி தேசிய கொடியை ஏந்தி நிற்கவே காவல்துறையினர் கீழே இறக்கி விட்டனர். இதனையடுத்து ஆகாஷ்வானி பவன் அருகே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராகுல், பிரியங்கா கைது
இந்த போராட்டத்தில் கைகோர்த்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரினாமூல் காங்கிரஸ் தலைவர்கள் Derek O’Brien மற்றும் Abhishek Banerjee உள்ளிட்டோர் போராட்டக் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, akashwani bhawan வெளியே அமர்ந்திருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை போராட்டக் களத்திலிருந்து அப்புறப்படுத்திய பாதுகாப்பு படையினர், இருவரையும் பேருந்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி கைது செய்தனர்.

வாகனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட ராகுல், பிரியங்கா காந்தி உள்பட இந்தியா கூட்டணி எம்பிக்கள் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

இப்போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் துரை வைகோ, திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்ட நிலையில், அவர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டு ஆணையமாக மாறியிருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி., ஆவேசமாக முழக்கமிட்டார்.

Related Link
தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாட்டுக்கு இடமுண்டா?

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாட்டுக்கு இடமுண்டா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி மீது சாதகமான கண்ணோட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved