news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

இந்திய மக்களின் ஆசி தான் காரணம் என பிரதமர் மோடி நெகிழ்ச்சி

மக்கள் பணியில் 25 ஆண்டுகள் - வழிபாடு

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய மக்களின் ஆசி தான் காரணம் என பிரதமர் மோடி நெகிழ்ச்சி

குஜராத் முதலமைச்சராக, 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பதவியேற்ற போது, இது சாத்தியமாகும் என்று நினைத்து பார்க்கவே இல்லை என்றும், இந்திய மக்களின் ஆசியால் சேவைப் பணி 25 ஆண்டுகளை கடந்து சாத்தியமாகி இருப்பதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்தார்.
மக்கள் பணியில் 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, டெல்லியில் உள்ள பிள்ளையார் கோயிலில், பிரதமர் மோடி மனமுருக வழிபாடு நடத்தினார்.

2001, அக்டோபர் 7ஆம் தேதி...
கடந்த 2001ஆம் ஆண்டின் இதே நாளில் அக்டோபர் 7ஆம் தேதி, குஜராத்தின் முதல்வராக முதன்முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. மூன்று முறை முதல்வராக பதவி வகித்த அவர், பின்னர் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளதை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற சேவா ஜோதி யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றியதாவது;
வாக்கு அரசியலால், சமூகம் பிளவுபட்டிருப்பது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று.

2047 வளர்ந்த இந்தியா இலக்கு
ஒரு விவசாயியின் வயலில் தண்ணீர் இல்லாவிட்டால், அது ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் பாதிக்குமா? மின்சாரம் இல்லாவிட்டால், அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் பாதிக்குமா? இல்லை என்பதே இதற்கான பதில். பிரச்சினை அனைவருக்குமானது எனும் போது, அதற்கான தீர்வும் அனைவருக்குமானதாகவே இருக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் 40 கோடிக்கும் குறைவாக இருந்தோம். இன்று 140 கோடிக்கும் அதிகமாக இருக்கிறோம். 140 கோடி மக்களும் இணைந்து 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம். நிச்சயமாக நாம் அதைச் செய்வோம்.

ஆற்றல், உற்சாகம், நம்பிக்கை
உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாம் உருவெடுப்போம். நிச்சயமாக இதைச் செய்வோம். உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவோம். நிச்சயமாக இதைச் செய்வோம். ஒலிம்பிக் போட்டியை நடத்துவோம். நிச்சயமாக இதைச் செய்வோம். விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வோம். நிச்சயமாக இதைச் செய்வோம். இந்த ஆற்றல், இந்த உற்சாகம், இந்த நம்பிக்கை அசாதாரணமானவை.

இந்திய விமானிக்கு சல்யூட்
இஸ்ரேல் சென்ற விமானத்தை விபத்துக்குள்ளாக்க ஃபிளை துபாய் விமானத்தின் துணை விமானி முயன்றபோது, தான் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், சதியை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் குறித்தே இன்று உலகம் பேசுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களைப் பற்றியும் உலகம் பேசும் ஒரு நாள் வரும்.

மக்களே கடவுள்
தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கை மற்றும் இடைவிடாத கடின உழைப்பின் மூலம் இந்த இலக்கு அடையப்படும். இந்தியா சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால், நம்மிடம் 140 கோடி தீர்வுகள் உள்ளன.

என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நாட்டு மக்கள் முன் நான் தலைவணங்குகிறேன்.

என்னைப்பொறுத்தவரை மக்களே கடவுள். கடினமாக உழைக்கும் பாஜக தொண்டர்களே எனது பலம்.

பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த சக ஊழியர்களுக்கும், ஜனநாயகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்ட அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

பிள்ளையார் கோயிலில் பிரதமர் சிறப்பு தரிசனம்
மக்கள் பணியில் 25 ஆண்டுகள் நிறைவை அடுத்து டெல்லி சரோஜினி நகரில் உள்ள பிள்ளையார் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் விநாயகப் பெருமானை பிரதமர் மோடி மனமுருகி வேண்டினார்.

Related Link
2027ல் பாஜகவின் இன்னொரு முகம், சாதி அரசியலா? UCCயா?

2027ல் பாஜகவின் இன்னொரு முகம், சாதி அரசியலா? UCCயா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி மீது சாதகமான கண்ணோட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved