news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்

பனாமா நாட்டுக் கொடி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹோர்முஸ் நீரிணை

பனாமா நாட்டுக் கொடியுடன் பயணித்த கப்பல் மீது தாக்குதல்

  • ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பனாமா நாட்டுக் கொடியுடன் பயணித்த வணிகக் கப்பல் மீது அடையாளம் தெரியாத பொருள் அல்லது ஏவுகணை தாக்கியதில், 11 மாலுமிகள் உட்பட 12பேர் காயமடைந்துள்ளனர்.
  • காயமடைந்த மாலுமிகள் அனைவரும் ஓமன் நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் உடனடியாகப் பத்திரமாக மீட்கப்பட்டு, ஓமனில் உள்ள காசாப் (Khasab) பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம்

  • மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், சவுதி அரேபியாவின் இரண்டு விமான நிலையங்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
  • இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி, மத்திய கிழக்கு முழுவதும் இந்த மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

முன்னாள் மேஜருக்கு துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை

  • அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஒருவருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்ற அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஃபோர்ட் ஹூட் தளத்தில் ஆயுதமின்றி இருந்த 13 அமெரிக்க வீரர்களை முன்னாள் மேஜர் நிதால் மாலிக் ஹசன் சுட்டுக் கொன்றதற்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
  • ராணுவத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.


Related Link
குடியுரிமையை ரத்து செய்யத் தொடங்கிய அமெரிக்கா

குடியுரிமையை ரத்து செய்யத் தொடங்கிய அமெரிக்கா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஜினிகாந்தின் ஜெயிலர்-2 திரைப்படத்துக்கு U/A சான்றிதழ்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved