news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

மனைவி கண்முன்னே கணவர் வெட்டிக்கொ*

பின்னணியில் 'பாத்ரூம்' முருகன் சம்பவம்

43

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் பாத்ரூம் முருகன் கொ* வழக்கின், முக்கிய குற்றவாளியான வீரபத்திரனை, அவரது மனைவியின் கண்முன்னே மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிப் படுகொ* செய்துள்ளது. ஜாமினில் வெளிவந்த வீரபத்திரனை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய மர்ம கும்பல்? இந்த கொடூர கொ*க்கு பின்னால் உள்ள மாஸ்டர் மைண்ட் யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக பிரமுகர்...
கடந்த ஆண்டு தமிழகத்தையே அதிர வைத்த திமுக பிரமுகர் பாத்ரூம் முருகன் கொ* வழக்கில், அதற்கு மூளையாக செயல்பட்டவர் சினிமா பாணியில் நடுரோட்டில் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் மீது ஏற்கனவே சில கொ* வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு நடந்த கொ*யில் ஜாமினில் வெளியே வந்த வீரபத்திரன், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பட்டியிலிருந்து நொச்சி ஓடைப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வாகனத்தில் மோதி...
திண்டுக்கல் - நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கை நோக்கி ஒரு ஸ்கார்பியோ கார் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கின் மீது கார் மோதியதில், வீரபத்திரனும் அவரது மனைவியும் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அந்த ஸ்கார்பியோ காரிலிருந்து இறங்கிய மர்ம கும்பல், அரிவாள்களுடன் வீரபத்திரனை நோக்கிப் பாய்ந்தது.

ஓட ஓட விரட்டி...
இதை கண்ட அவரது மனைவி அலறி துடிக்க, சுதாரித்து கொண்ட வீரபத்திரன் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார். ஆனால், விடாமல் துரத்திய அந்த கொ*வெறிப் பட்டாளம், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டிலேயே அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தது.

பாத்ரூம் முருகன்... சம்பவம்
முகத்திலும் தலையிலும் விழுந்த பலத்த வெட்டுக் காயங்களால் ரத்த வெள்ளத்தில் சரிந்த வீரபத்திரன், அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ரத்த வெறியாட்டம் ஆடிய அந்த கும்பல், தாங்கள் வந்த காரிலேயே மின்னல் வேகத்தில் தப்பியோடியது. கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி, இதே திண்டுக்கல் மாவட்டம் ஜோத்தாம்பட்டி பகுதியில் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான பாத்ரூம் முருகன், அவரது ஸ்கார்பியோ காருக்குள் உடல் முழுக்க வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் வரவு, செலவு கணக்கு தகராறில் அரங்கேறிய இந்த படுகொ* அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதல் குற்றவாளியாக...
இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய சாணார்பட்டி காவல்துறையினர், மேட்டுப்பட்டி வீரபத்திரன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்பட்ட வீரபத்திரன்தான் தற்போது அதே போன்று கொடூர முறையில் வெட்டி கொல்லப்பட்டு உள்ளார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சாணார்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டரும் தனிப்படை போலீஸாரும் உடனடியாக விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த வீரபத்திரனின் உடலை கைப்பற்றிய அவர்கள், கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர விசாரணை
மேலும், கொ*க்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த பாத்ரூம் முருகன் கொ*க்கு பழிக்கு பழி வாங்கும் படலமாக இந்த படுகொ* அரங்கேறியதா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா? என்ற கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய கொ*யாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Link

"நாங்கள் இருக்கிறோம், பாத்துக்குறோம்" என Buildup விட்ட லெப்ட் பாண்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவு கப்பல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved