news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

வீடியோ எடுத்த பெண் இன்ஸ்டா இன்புளூயன்சர், விரட்டி விரட்டி மிரட்டிய இளைஞர்கள்

கஃபேவில் வெடித்த மோதல், பாய்ந்த வழக்கு

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கன்னியாகுமரி அருகே கஃபேவில் தோழிகளுடன் டீ குடித்துக் கொண்டிருந்த பெண் இன்ஸ்டா இன்புளூயன்சரை, இளைஞர்கள் சிலர் இரவில் ஆபாச வார்த்தைகளால் திட்டியும், விரட்டி விரட்டி மிரட்டியும் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டா இன்புளூயன்சரை இளைஞர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டியது ஏன்? அத்துமீறலுக்கான காரணம் என்ன?

இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான...
கன்னியா​குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிஸ்மி. இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான இவர் கண்டன்விளை பகுதியில் நடந்த தேவாலய திருவிழாவிற்கு தனது தோழிகளுடன் சென்றுவிட்டு மீண்டும் ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எங்கு சென்றாலும் என்ன நடந்தாலும் சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிடும் பிஸ்மி, குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே செயல்பட்டு வரும் “ஹார்பர் கஃபே” தேனீர் கடைக்கு சென்று தோழிகளுடன் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

வீடியோ எடுக்கும் போது...
வழக்கம்போல, செல்ஃபோனை ஆன் செய்து தனது ஃபாலோயர்களிடம் கஃபேவை காட்டி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே கஃபேவில் டீ குடித்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் வீடியோவில் தங்களையும் சேர்த்து கவர் செய்ததால் முகத்தில் கோபத்தைக் காட்டி உள்ளனர்.

விரட்டிய இளைஞர்கள்
ரீல்ஸ் எடுப்பதாக இருந்தால், மற்றவர்களை ஏன் வீடியோவில் காட்டுகிறீர்கள்? என அந்த இளைஞர்கள் முறைத்தபடியே ஆபாச வார்த்தைகளில் பேச, பதிலுக்கு பிஸ்மியும் அவரது தோழிகளும் இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ”நாங்கள் பயந்துட்டோம்” என நடனம் ஆடி பிஸ்மியை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இரவுநேரத்தில் பிரச்சினை அதிகமாகிவிடும் என்றெண்ணிய பெண்கள் அங்கிருந்து கிளம்பினர். ஆனால், அந்த இளைஞர்கள் காதுகூசும் ஆபாச வார்த்தைகளால் திட்டியபடியே விடாமல் பின்தொடர, அச்சத்தில் பிஸ்மியும் அவரது தோழிகளும் மற்றொரு டீக்கடைக்குள் சென்றனர்.

15 இளைஞர்கள் மீது வழக்கு
’எல்லை மீறினால் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுவேன், போலீசிலும் புகார் அளிப்பேன்’ என பிஸ்மி கூற, யாரிடம் வேண்டுமானாலும் போய் புகார் கொடுங்கள், வீடியோ பதிவிடுங்கள், நானே வக்கீல்தான் என ஒரு இளைஞர் மிரட்டும்தொனியில் பேசினார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா இன்புளூயன்சர் குளச்சல் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் பெண்களை விரட்டி விரட்டி தொல்லை கொடுத்ததாக 15 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொது இடங்களில்...
இளைஞர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டியதும், விரட்டி விரட்டி பிரச்சினையில் ஈடுபட்டதும் மன்னிக்க முடியாத தவறுதான். அதேநேரம், வியூஸ் மற்றும் லைக்குகளுக்காக பொது இடங்களில் யூடியூபர்கள், இன்ஸ்டா இன்புளூயன்சர்கள் ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது அவர்களை மட்டும் பதிவு செய்து கொண்டால் பிரச்சனையில்லை.

ஆனால், மற்றவர்களையும் சேர்த்து வீடியோவில் பதிவு செய்யும்போது அதில் அவர்களுக்கு விருப்பம் உள்ளதா? என்பது மிக முக்கியமான ஒன்று. சுதந்திரம் என்றபெயரில் இளைஞர்களை பிஸ்மியும் அவரது தோழிகளும் வீடியோ எடுத்ததால்தான் பிரச்சினையே ஆரம்பித்தது. அதனால், அவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி செய்தால்தான் வீடியோவால் இதேபோன்று மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகாது என்பதே பலரது கருத்து.

Related Link
பயணிகளுக்கு பளார், போதையில் பேஜார், டேஷ்போர்டில் பல்லிபோல் ஒட்டி ஓவர் சேட்டை

பயணிகளுக்கு பளார், போதையில் பேஜார், டேஷ்போர்டில் பல்லிபோல் ஒட்டி ஓவர் சேட்டை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved